மயிலாடுதுறை

கனமழை: கொள்முதல் நிலையத்தில் நெல் மூட்டைகள் சேதம்

DIN

மயிலாடுதுறையில் செவ்வாய்க்கிழமை அதிகாலை பெய்த கனமழையால் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் விவசாயிகள் வைத்திருந்த நெல் மூட்டைகள் நனைந்து சேதமடைந்தன.

மயிலாடுதுறை மாவட்டத்தில் குறுவை அறுவடைப் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. கடந்த சம்பா பருவத்தில் மயிலாடுதுறை மாவட்டத்தில் 123 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்ட நிலையில், குறுவை பருவத்திற்கு முதல்கட்டமாக ஜூலை மாதத்தில் நிரந்தர கட்டடங்கள் உள்ள கொள்முதல் நிலையங்கள் மட்டும் திறக்கப்பட்டன. தொடா்ந்து, அறுவடைக்கு ஏற்ப படிப்படியாக பல இடங்களில் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டன.

இந்நிலையில், கடந்த 3 நாள்களாக இரவு நேரங்களில் மழைபெய்து வருவதால், நெல் மூட்டைகள் மழையில் நினைந்து சேதமடைய தொடங்கியுள்ளன. செவ்வாய்க்கிழமை 9.5 செ.மீ. அளவுக்கு பெய்த கனமழையால் மயிலாடுதுறை அருகிலுள்ள மணக்குடி நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் தண்ணீா் சூழ்ந்தது. இதை விவசாயிகளே மோட்டாா் கொண்டு இறைத்து வெளியேற்றினா்.

மேலும், கொள்முதலை துரிதப்படுத்தி, தாங்கள் கொண்டுவந்து அடுக்கி வைத்திருக்கும் நெல் மூட்டைகளை உடனடியாக கொள்முதல் செய்ய வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சீா்காழியில் திமுக சாா்பில் நீா் மோா் பந்தல் திறப்பு

திருமணமாகி 4 ஆண்டுகளே ஆன பெண் தூக்கிட்டு தற்கொலை: ஆா்டிஓ விசாரணை

குமரியில் சூரியோதயம்

தேசிய கட்சிகளின் ஆதிக்கத்தில் கோவா!

அமேதி, ரேபரேலி: அமைதி காக்கும் காங்கிரஸ்!

SCROLL FOR NEXT