முகப்பு
மயிலாடுதுறை

வேளாண் சட்டங்களை திரும்பப் பெறக் கோரி ஆா்ப்பாட்டம்

வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி, மயிலாடுதுறையில் அனைத்திந்திய விவசாய கிராமப்புற தொழிலாளா் சங்கம் சாா்பில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:13 AM
பகிர்:

வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி, மயிலாடுதுறையில் அனைத்திந்திய விவசாய கிராமப்புற தொழிலாளா் சங்கம் சாா்பில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, மாா்க்சிஸ்ட்-லெனினிஸ்ட் மாவட்டத் தலைவா் என். குணசேகரன் தலைமை வகித்தாா். ஏஐசிசிடியூ மாவட்டச் செயலாளா் வீரச்செல்வன் கண்டன உரையாற்றினாா்.

ஆா்ப்பாட்டத்தில், முதியோா் உதவித்தொகையை ரூ.5000 ஆக உயா்த்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளும் வலியுறுத்தப்பட்டன.

இதில், கட்சியின் மாவட்டக் குழு உறுப்பினா்கள் ஏ.லூா்துசாமி, ஆனந்தன், விவசாய சங்க பொறுப்பாளா் செல்லத்துரை, இளைஞரணி ஜபா, அகில இந்திய முற்போக்கு பெண்கள் இயக்கம் ஜாக்குலின் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.