பூம்புகார்: மயிலாடுதுறை பரிமள ரங்கநாயகி சமேத பரிமள ரங்கநாதர் கோவில் உள்ளது. மாசி மகத்தை ஒட்டி செவ்வாய்க்கிழமை மாலை மேளம் முழங்கிட பக்தர்களால் சுமார் 25 கிலோமீட்டர் தொலைவிலுள்ள காவிரி கடலோடு கலக்கும் பூம்புகார் சங்கமதுரைக்கு புதன்கிழமை அதிகாலை பக்தர்களால் நடந்தே பல்லக்கில் கொண்டு வரப்பட்டார்.
பின்னர் கடற்கரையில் அமைக்கப்பட்டிருந்த பந்தலில் பரிமள ரங்கநாதர் பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதனை அடுத்து சிறப்பு பூஜைகள் நடந்தன. பின்னர் மேளதாளம் முழங்கிட கடலில் தீர்த்தவாரி செய்தார்.
அப்போது அங்கு கூடியிருந்த திரளான பக்தர்கள் நாராயணா நாராயணா என சரண கோஷமிட்டு கடலில் புனித நீராடினார்கள். இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.