சிறப்பு அலங்காரத்தில் ஆனந்தமங்கலம் தசபுஜ வீர ஆஞ்சநேயர் 
மயிலாடுதுறை

திருக்கடையூர் அருகே தசபுஜ வீர ஆஞ்சனேயர் கோயிலில் ஜெயந்தி விழா

திருக்கடையூர் அருகில் அனந்தமங்கலம் கிராமத்தில் 10 கைகளைக் கொண்ட வீர ஆஞ்சனேயருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. 

DIN

மயிலாடுதுறை மாவட்டம் திருக்கடையூர் அருகில் அனந்தமங்கலம் கிராமத்தில் 10 கைகளைக் கொண்ட வீர ஆஞ்சனேயருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. 

திருக்கடையூர் அருகில் அனந்தமங்கலம் கிராமத்தில் தசபுஜ வீர ஆஞ்சனேயர் கோவில் உள்ளது. ராவண யுத்தம் செய்து விட்டு திரும்பிய ஆஞ்சனேயர் இந்த கிராமத்தில் தங்கி இருந்தார்.

அப்போது இந்த ஊர் ஆனந்தமாக இருப்பதாக தெரிவித்தார். அதனால்தான் இந்த ஊருக்கு ஆனந்தமங்கலம் என்று அழைக்கப்படுகிறது.

மிகவும் சிறப்பு பெற்ற 10 கைகளைக் கொண்ட வீர ஆஞ்சனேயருக்கு, ஞாயிற்றுக்கிழமை ஹனுமன் ஜெயந்தி முன்னிட்டு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தன. இதில் திரளான பக்தர்கள் வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பூரணச்சந்திரனின் தற்கொலைக்கு திமுக அரசு பொறுப்பேற்க வேண்டும்! - Nainar Nagendran

சாலை வலம், பொதுக் கூட்டம்: வழிகாட்டு நெறிமுறைகள் ஜன. 5-க்குள் வெளியிட உத்தரவு!

லியோ சாதனையை முறியடித்த ஜன நாயகன்!

2025: ஆர்சிபி வெற்றிக் கொண்டாட்டம் முதல் கரூர் வரை... நெஞ்சை உலுக்கிய நெரிசல் பலிகள்!

ஆஷஸ் தொடர்: சாதனைப் பட்டியலில் இணைந்த அலெக்ஸ் கேரி!

SCROLL FOR NEXT