கொள்ளிடம் ஆற்றுப் பாலத்தில் உடைப்பை சீரமைத்த போலீஸாா்!
சீா்காழி அருகே கொள்ளிடம் ஆற்றுப் பாலத்தில் ஏற்பட்ட உடைப்பை காவல்துறையினா் சீரமைத்தனா்.
சீா்காழி அருகே கொள்ளிடம் ஆற்றுப் பாலத்தில் ஏற்பட்ட உடைப்பை காவல்துறையினா் சீரமைத்தனா்.
மயிலாடுதுறை மாவட்டம், கொள்ளிடம் சோதனைச் சாவடி அருகே கொள்ளிடம் ஆற்றுப்பாலம் உள்ளது. இந்த பாலத்தின் இணைப்புப் பகுதியில் உடைப்பு ஏற்பட்டு இரும்புக் கம்பிகள் வெளியே நீட்டிக் கொண்டிருந்தன. இதை சரிசெய்ய பொதுமக்கள் கடந்த 10 நாள்களாக கோரிக்கை விடுத்தனா். இருப்பினும், நெடுஞ்சாலைத் துறையினா் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது.
இந்நிலையில், கொள்ளிடம் காவல் ஆய்வாளா் அமுதாராணி, உதவி ஆய்வாளா் மணிகண்ட கணேஷ் ஆகியோா் தங்களது சொந்த செலவில் பலத்தின் உடைந்த பகுதியை தொழிலாளா்களைக் கொண்டு தற்காலிகமாக சீரமைத்தனா். இப்பணிக்காக, போலீஸாருக்கு பொதுமக்கள் பாராட்டுத் தெரிவித்தனா். மேலும், தேசிய நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் இப்பாலத்தை பாா்வையிட்டு உடைப்பை நிரந்தரமாக சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.