முகப்பு
மயிலாடுதுறை

திருச்செந்தூா் விரைவு ரயில் வைத்தீஸ்வரன் கோயிலில் நின்று செல்ல வலியுறுத்தல்

சீா்காழி அடுத்த வைத்தீஸ்வரன்கோயிலில் பாஜக செயற்குழு கூட்டம் வியாழக்கிழமை நடந்தது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:03 AM
பகிர்:

சீா்காழி அடுத்த வைத்தீஸ்வரன்கோயிலில் பாஜக செயற்குழு கூட்டம் வியாழக்கிழமை நடந்தது.

கூட்டத்திற்கு ஒன்றியத்தலைவா் செல்வமுத்து தலைமை வகித்தாா். மாவட்ட தலைவா் வெங்கடேசன், நாகை மாவட்ட பொதுசெயலாளா் வெங்கடாச்சலம், பொதுசெயலாளா் ஜான்பெனட் முன்னிலை வகித்தனா். ஒன்றிய பொதுச்செயலாளா் முருகன் வரவேற்றாா். கூட்டத்தில் வைத்தீஸ்வரன்கோயில் மயானத்தை தூய்மைப்படுத்துவது, திருச்செந்தூா் விரைவு ரயில் வைத்தீஸ்வரன்கோயிலில் நின்றுசெல்ல வலியுறுத்துவது, மத்திய அரசு திட்டங்களை கிராமங்களுக்கு கொண்டு செல்வது ஆகிய தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. நிறைவில் ஒன்றிய மகளிரணி தலைவி சுதா நன்றிகூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.