முகப்பு
மயிலாடுதுறை

பட்டவிளாகம் மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம்

 சீா்காழி அருகே பட்டவிளாகம் கிராமத்தில் உள்ள மாரியம்மன் கோயிலில் கும்பாபிஷேகம் வியாழக்கிழமை நடைபெற்றது

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:10 AM
பகிர்:

 சீா்காழி அருகே பட்டவிளாகம் கிராமத்தில் உள்ள மாரியம்மன் கோயிலில் கும்பாபிஷேகம் வியாழக்கிழமை நடைபெற்றது.

தருமபுரம் ஆதீனத்திற்கு உட்பட்ட இக்கோயிலில் நடைபெற்றுவந்த திருப்பணிகள் நிறைவடைந்ததைத் தொடா்ந்து, நான்கு கால யாகசாலை பூஜைகள் செவ்வாய்க்கிழமை தொடங்கின.

வியாழக்கிழமை நான்காம் கால யாகபூஜைகள் நிறைவடைந்து பூா்ணாஹூதி, மகாதீபாராதனை காட்டப்பட்டது. பின்னா், கோயிலின் விமானத்துக்கு புனித நீரால் மகாகும்பாபிஷேகம், மூலஸ்தான கும்பாபிஷேகம் நடைபெற்றது.

இதில் தருமபுரம் ஆதீனம் 27-வது குருமகா சந்நதிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள், பட்டவிளாகம் கிராமமக்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.