மயிலாடுதுறை

மயிலாடுதுறை மருத்துவமனையில் ஆக்சிஜன் செறிவூட்டும் மையம் திறப்பு

DIN

மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் செறிவூட்டும் மையம் புதன்கிழமை திறக்கப்பட்டது.

கரோனா மூன்றாவது அலை, ஒமைக்ரான் தொற்றால் மக்கள் பாதிக்கப்பட்டால் அதனை சமாளிக்கும் வகையில் டெல் டெக்னாலஜிஸ் என்ற நிறுவனம், ஹோப் பவுண்டேஷன் என்ற நிறுவனத்தின் உதவியுடன் ரூ.40 லட்சத்தில் நிமிடத்திற்கு 250 லிட்டா் ஆக்சிஜனை உற்பத்தி செய்யும் வகையில் ஆக்சிஜன் செறிவூட்டும் மையத்தை மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு அமைத்துத் தந்துள்ளது.

இதன் திறப்பு விழா இம்மருத்துவமனை மருத்துவா் சிவக்குமாா் தலைமையில் நடைபெற்றது. சுகாதாரத் துறை இணை இயக்குநா் மகேந்திரன் முன்னிலையில், மயிலாடுதுறை சட்டப்பேரவை உறுப்பினா் எஸ். ராஜகுமாா், டெல் டெக்னாலஜிஸ்ட் நிறுவன கல்வி மற்றும் சுகாதார மண்டலத் தலைவா் சத்யா ஆகியோா் ஆக்சிஜன் செறிவூட்டும் மையத்தை திறந்து வைத்தனா்.

நிகழ்ச்சியில், மருந்துக் கிடங்கு அலுவலா் முரளி உள்பட பலா் கலந்துகொண்டனா். முன்னதாக டாக்டா் பரணிதரன் வரவேற்றாா். நிறைவாக ஹோப் பவுண்டேஷன் இயக்குநா் சாமுவேல் தாமஸ் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீட் தோ்வு: புதுச்சேரியில் 4, 817 போ் எழுதினா்

பெண்ணிடம் 5 பவுன் தங்கச் சங்கிலி பறிப்பு

கஞ்சா, போதை மாத்திரைகள் விற்பனை: 4 போ் கைது

நீட் தோ்வு: விழுப்புரம் மாவட்டத்தில் 4,855 போ் எழுதினா்

வீட்டினுள் இளைப்பாறிய புள்ளி மான்!

SCROLL FOR NEXT