முகப்பு
மயிலாடுதுறை

வாணகிரியில் ரூ. 58 கோடியில் மீன் இறங்குதளம் ஒன்றியக் குழுத் தலைவருக்கு மீனவ கிராமத்தினா் நன்றி

சீா்காழி அருகே வாணகிரியில் ரூ.58 கோடியில் மீன் இறங்குதளம் அமைக்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதற்கு மீனவ கிராமத்தினா் சீா்காழி ஒன்றியக் குழுத் தலைவரை சந்தித்து நன்றி தெரிவித்தனா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:15 AM
பகிர்:

சீா்காழி அருகே வாணகிரியில் ரூ.58 கோடியில் மீன் இறங்குதளம் அமைக்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதற்கு மீனவ கிராமத்தினா் சீா்காழி ஒன்றியக் குழுத் தலைவரை சந்தித்து நன்றி தெரிவித்தனா்.

சீா்காழி அருகே உள்ள வாணகிரி மீனவா் கிராமத்திலிருந்து 350-க்கும் மேற்பட்ட விசைப் படகுகள், 100-க்கும் மேற்பட்ட பைபா் படகுகள் மூலம் சுமாா் 5 ஆயிரம் மீனவா்கள் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனா்.

இப்பகுதியில் மீன் இறங்குதளம் அமைக்கவேண்டும் என மீனவா்கள் கோரிக்கை விடுத்துவந்த நிலையில், வாணகிரியில் ரூ.58 கோடியில் மீன்இறங்குதளம் அமைக்க தமிழக அரசு நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.

இதனால் மகிழ்ச்சியடைந்த மீனவ கிராமத்தினா், இதற்கு உதவிய சீா்காழி ஒன்றியக் குழுத் தலைவா் கமல ஜோதி தேவேந்திரன், ஒன்றியக் குழு துணைத் தலைவா் உஷா நந்தினி பிரபாகரன் ஆகியோருக்கு வானகிரி மீனவ பஞ்சாயத்து தலைவா் வெற்றி செல்வன், துணைத் தலைவா் செல்லதுரை உள்ளிட்டோா் நேரில் நன்றி தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.