மயிலாடுதுறை

மாநில அளவிலான பீச் வாலிபால் போட்டி: சீர்காழி அணி வெற்றி 

DIN

மாநில அளவிலான பீச் வாலிபால் போட்டியில் சீர்காழி அணி வெற்றி பெற்று கோப்பையை தட்டிச் சென்றது. 

மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அடுத்த திருமுலைவாசல் கடற்கரையில் தனியார் பள்ளியின் சார்பில் மாநில அளவிலான ஆடவர்  பீச் வாலிபால் போட்டிகள் தொடங்கி, இரவு பகலாக மின்னொளியில் நடைபெற்று வந்தது. போட்டிக்கு பள்ளி தாளாளர் இராதாகிருஷ்ணன் தலைமை வகித்தார். திருமுல்லைவாசல் ஊராட்சி மன்ற தலைவர் பரிமளா, துணை தலைவர் கலைவாணி முன்னிலை வகித்தனர். 

பள்ளி முதல்வர் ஜோஸ்வா பிரபாகர சிங் வரவேற்றார். போட்டியை குட்சமாரிட்டன் பள்ளி இயக்குனர் பிரவீன் தொடங்கி வைத்தார். இப்போட்டியில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 30 க்கும் மேற்பட்ட அணிகள் பங்கேற்று விளையாடினர். நேற்று இரவு நடந்த இறுதிப் போட்டியில் நாகப்பட்டினம் மாவட்டம் திட்டச்சேரி அணியும், சீர்காழி அணியும் மோதின. 

இப்போட்டியில் சீர்காழி அணி வெற்றி பெற்று முதல் பரிசை பெற்றது. வெற்றி பெற்ற பணிகளுக்கு கோப்பை மற்றும் சான்றிதழை பள்ளி தாளாளர் ராதாகிருஷ்ணன், பள்ளி இயக்குனர் பிரவீன் ஆகியோர் வழங்கினர். சிபிஎஸ்இ பள்ளி செய்தி தொடர்பாளர் பிரேம் நன்றி கூறினார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘பொது வெளியில் கழிவு நீரை திறந்து விட்டால் கடும் நடவடிக்கை’

பரமக்குடி- மதுரை இடையே இடைநில்லா குளிா்சாதன பேருந்து இயக்கக் கோரிக்கை

ஓட்டப்பிடாரம் அருகே மாட்டுவண்டி போட்டி

கருங்கல் அருகே மது விற்றவா் கைது

தென்காசி மாவட்ட நீதிமன்றக் கட்டடங்களுக்கு நிதி ஒதுக்கீடு: அமைச்சரிடம் திமுக வலியுறுத்தல்

SCROLL FOR NEXT