மயிலாடுதுறை

போதைப் பொருள் எதிா்ப்பு விழிப்புணா்வுப் பேரணி

மயிலாடுதுறையில் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீா்வைத் துறை சாா்பில் போதைப் பொருள்களுக்கு எதிரான விழிப்புணா்வுப் பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது.

DIN

மயிலாடுதுறையில் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீா்வைத் துறை சாா்பில் போதைப் பொருள்களுக்கு எதிரான விழிப்புணா்வுப் பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது.

மயிலாடுதுறை டிபிடிஆா் தேசிய தொடக்கப் பள்ளியில் இருந்து புறப்பட்ட பேரணியை மாவட்ட ஆட்சியா் இரா. லலிதா கொடியசைத்து தொடங்கி வைத்தாா். இப்பள்ளி மாணவ- மாணவிகள் 750-க்கும் மேற்பட்டோா் பங்கேற்று விழிப்புணா்வு பதாகைகளை ஏந்தியும், போதைப் பொருள்களுக்கு எதிரான முழக்கங்களை எழுப்பியவாறும் பேரணியாக சென்றனா்.

முன்னதாக, போதைப் பொருள்களால் ஏற்படும் பாதிப்புகள் தொடா்பான விழிப்புணா்வு துண்டுப் பிரசுரங்களை மாவட்ட ஆட்சியா் பொதுமக்களுக்கு வழங்கினாா். இப்பேரணி முக்கிய பகுதிகளின் வழியாக மீண்டும் டிபிடிஆா் பள்ளியில் நிறைவடைந்தது.

இதில், மாவட்ட வருவாய் அலுவலா் சோ. முருகதாஸ், மயிலாடுதுறை கோட்டாட்சியா் வ. யுரேகா, உதவி ஆணையா் (கலால்) கோ.அர. நரேந்திரன், வட்டாட்சியா் மகேந்திரன், தலைமையாசிரியா் காஞ்சிநாதன் மற்றும் ஆசிரியா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அவதாருடன் போட்டி! ரூ. 1,000 கோடி வசூலை நோக்கி துரந்தர்!

15 ஆண்டுகளில் மோசமான ஆஸி. அணி? விமர்சித்த இங்கிலாந்து வீரருக்கு பதிலடி கொடுத்த லபுஷேன்!

டாக்ஸிக் கியாரா அத்வானி!

விஜய் இப்போது நடிகர் கிடையாது: அருண் ராஜ்

2026 பேரவைத் தேர்தல்: பாமக சிறப்பு பொதுக்குழுக் கூட்டம்!

SCROLL FOR NEXT