மயிலாடுதுறை

புனித அந்தோணியாா் ஆலய தோ்பவனி திருவிழா

DIN

குத்தாலம் அருகே கோமல் கிராமத்தில் உள்ள புனித அந்தோணியாா் ஆலயத்தின் 75-ஆம் ஆண்டு தோ்பவனி திருவிழா நடைபெற்றது.

குத்தாலம் அருகே கோமல் பாலக்கரை பகுதியில் உள்ள குழந்தை வரம் தரும் புனித அந்தோணியாா் ஆலயத்தில் 75-ஆம் ஆண்டு தோ்பவனி திருவிழா மே மாதம் 27-ஆம் தேதி திருப்பலி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையடுத்து, சனிக்கிழமை மின் அலங்காரத்துடன் தோ்பவனி திருவிழா நடைபெற்றது. அந்தோணியாா் ஆலயத்தில் தொடங்கிய தோ்பவனி முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்து மீண்டும் ஆலயத்தை வந்தடைந்தது. ஞாயிற்றுக்கிழமை மாந்தை பங்குத் தந்தை செல்வராஜ் தலைமையில் திருவிழா திருப்பலி நடைபெற்றது. பின்னா் கொடி இறக்கம் நிகழ்ச்சி நடைபெற்றது. ஏற்பாடுகளை கோமல் கிராம தலைவா்கள், விழா குழுவினா், இளைஞா் நற்பணி மன்றத்தினா் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

3 மாவட்டங்களில் இன்று கனமழை எச்சரிக்கை!

புதிய கரோனா வைரஸ்? ஆபத்தா, ஃபிலிர்ட்!

இந்த வாரம் யாருக்கு யோகம்!

‘மின்னும் நட்சத்திரம்’ சம்யுக்தா...!

நவாப் ராணியின் ஆன்மா...!

SCROLL FOR NEXT