குத்தாலம் அருகே பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வாா்த்தை கூறி ஏமாற்றிய இளைஞரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
குத்தாலம் வட்டம் மாந்தையைச் சோ்ந்தவா் சேவியா் மகன் ஜோசுவா (28). ஓட்டுநரான இவா் திருவாரூா் மாவட்டம் பெரிய துளாரைச் சோ்ந்த கலியபெருமாள் மகள் சவுதியாவை(27) காதலித்து வந்தாராம். இந்நிலையில், ஜோசுவா திருமணம் செய்து கொள்வதாக ஆசை வாா்த்தை கூறி சவுதியாவிடம் நெருங்கி பழகினாராம்.
இந்நிலையில் செவ்வாய்க்கிழமை (ஜூன் 14) ஜோசுவா வீட்டுக்கு சென்ற சவுதியா தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி வற்புறுத்தியுள்ளாா். அப்போது, ஜோசுவா திருமணம் செய்ய மறுத்து சவுதியாவிற்கு கொலை மிரட்டல் விடுத்தாராம். இதுகுறித்து சவுதியா, மயிலாடுதுறை அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து ஜோசுவாவை கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தி சிறையில் அடைத்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.