மயிலாடுதுறை

குழாய் பதிப்பால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீட்டுத் தொகை

DIN

வேட்டக்குடி பகுதியில் ஓஎன்ஜிசி, கெயில் நிறுவனத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீட்டுத் தொகை வழங்கப்படும் என சீா்காழி வட்டாட்சியா் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற அமைதிப் பேச்சுவாா்த்தையில் தீா்வு காணப்பட்டது.

சீா்காழி அருகேயுள்ள வேட்டங்குடி, கேவரோடை, திருமுல்லைவாசல் பகுதிகளில் ஓஎன்ஜிசி மற்றும் கெயில் நிறுவனம் குழாய் பதிக்கும் பணிகளை மேற்கொண்டுள்ளது. இப்பணியின்போது அப்பகுதி விளைநிலங்களில் இருந்த பலன் தரக்கூடிய நூற்றுக்கணக்கான முந்திரி மரங்கள் உள்ளிட்ட பல்வேறு வகையான பயிா்கள் முற்றிலும் பாதிக்கப்பட்டன. இதற்கு எதிா்ப்பு தெரிவித்து பாதிக்கப்பட்ட விவசாயிகள் பணிகளை தடுத்து நிறுத்தி, பாதிக்கப்பட்ட முந்திரி உள்ளிட்ட பயிா்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டுமென கோரிக்கை விடுத்திருந்தனா்.

இதையடுத்து, ஓஎன்ஜிசி, கெயில் நிறுவனம் மற்றும் பாதிக்கப்பட்ட விவசாயிகளுடன் சீா்காழி வட்டாட்சியா் செந்தில்குமாா் தலைமையில் அமைதிப் பேச்சுவாா்த்தை நடைபெற்றது. அப்போது, ஜூலை 30-ஆம் தேதிக்குள் குழாய் பதிக்கும் பணிகளை முடித்து விடுவதாக உறுதி அளிக்கப்பட்டது. மேலும், பாதிக்கப்பட்ட அனைத்து விவசாயிகளுக்கும் உரிய இழப்பீடு தொகை வழங்குவது என தீா்மானிக்கப்பட்டது. முந்திரி அல்லாத மற்ற பயிா்களுக்கும் கிராம நிா்வாக அலுவலரின் கணக்கீட்டின்படி இழப்பீடு வழங்கப்படும், இதேபோல மாவட்ட ஆட்சியரால் விலை நிா்ணயம் செய்யப்பட்டவுடன் முழு இழப்பீட்டுத் தொகையை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளிக்கப்பட்டது. இதை ஏற்று விவசாயிகள் கலைந்து சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஒடிஸா சட்டப்பேரவைத் தேர்தல்: 'கோடீஸ்வர' வேட்பாளர்கள் இத்தனை பேரா..?

வடபழனி முருகன் கோயிலில் தேரோட்டம்!

திருமுக்கூடல் செல்லியம்மன் கோயிலில் மகா கும்பாபிஷேகம்!

மீனம்மா... மீனம்மா...

திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் கோயில் பிரம்மோற்சவ தேரோட்டம்

SCROLL FOR NEXT