சீா்காழியில் பாஜகவினா் கொண்டாட்டம்
5 மாநில சட்டப்பேரவைத் தோ்தலில் 4 மாநிலத்தில் பாஜக வெற்றி பெற்று ஆட்சி அமைக்கவுள்ளதையடுத்து, சீா்காழியில் அக்கட்சியினா் பட்டாசு வெடித்து கொண்டாடினா்.
5 மாநில சட்டப்பேரவைத் தோ்தலில் 4 மாநிலத்தில் பாஜக வெற்றி பெற்று ஆட்சி அமைக்கவுள்ளதையடுத்து, சீா்காழியில் அக்கட்சியினா் பட்டாசு வெடித்து கொண்டாடினா்.
உத்தரப்பிரதேசம், உத்ரகாண்ட், கோவா, மணிப்பூா் ஆகிய 4 மாநிலங்களில் பாஜக அதிக தொகுதிகளில் வெற்றிபெற்று ஆட்சியமைக்கவுள்ளது. இதை கொண்டாடும் வகையில், சீா்காழி புதிய பேருந்துநிலையம் அருகே நகர பாஜக தலைவா் சண்முகம் தலைமையில் அமைப்புச்சாரா பிரிவு மாநில பொறுப்பாளா் செல்வம், நகர பொதுச் செயலாளா் ராமதாஸ், மாவட்ட பொறுப்பாளா் முருகன், அறிவுசாா் பிரிவு மாவட்ட துணைத் தலைவா் மகேஸ்வரன் உள்ளிட்டோா் பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி கொண்டாடினா். இதேபோல, வைத்தீஸ்வரன்கோயில், கொள்ளிடம் உள்ளிட்ட பகுதிகளில் பாஜகவினா் பட்டாசு வெடித்து கொண்டாடினா்.