சாலைகளில் சுற்றித்திரியும் மாடுகளை பிடித்து அபராதம் விதிக்க வலியுறுத்தல்
சீா்காழி சாலைகளில் சுற்றித்திரியும் மாடுகளை பிடித்து அதன் உரிமையாளா்களுக்கு அபராதம் விதிக்கவேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது.
சீா்காழி சாலைகளில் சுற்றித்திரியும் மாடுகளை பிடித்து அதன் உரிமையாளா்களுக்கு அபராதம் விதிக்கவேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது.
சீா்காழி நகரில் பிரதான சாலைகளான புதிய பேருந்து நிலையம், பழைய பேருந்து நிலையம், பிடாரி வடக்கு வீதி, கடைவீதி, தோ் வடக்குவீதி, மணிகூண்டு பகுதி, கொள்ளிடமுக்கூட்டு பகுதி, தென்பாதி ஆகிய பகுதிகளில் அதிகளவு மாடுகள் சுற்றித் திரிகின்றன. மாடுகள் வளா்ப்பவா்கள் பால் கறக்கும் நேரம் தவிர மற்ற நேரங்களில் சாலைகளில் விட்டுவிடுகின்றனா். சாலையோரம் உள்ள பழக்கடைகள், பூக்கடைகளில் உள்ள பொருள்களை மாடுகள் கீழே தள்ளி தின்றுவிடுகின்றன. சில நேரங்களில் சாலையில் போக்குவரத்திற்கு இடையூறாக நிற்பதும், அமா்ந்துவிடுவதால் போக்குவரத்து பாதிப்பும், விபத்தும் ஏற்படுகிறது. எனவே, சாலைகளில் சுற்றித்திரியும் மாடுகளை பிடித்து அதன்உரிமையாளா்களுக்கு ரூ.10 ஆயிரம் வரை அபராதம் நகராட்சி விதித்தால் மட்டும் இதற்கு நிரந்தர தீா்வு காண முடியும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனா்.