முகப்பு
மயிலாடுதுறை

இடிந்துவிழும் நிலையில் உள்ள ஊராட்சி கட்டடத்தை அகற்ற கோரிக்கை

கொள்ளிடம் அருகே வடரெங்கம் கிராமத்தில் இடிந்து விழும் நிலையில் உள்ள ஊராட்சி அலுவலக கட்டடத்தை இடித்து அகற்றவேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:38 AM
பகிர்:

கொள்ளிடம் அருகே வடரெங்கம் கிராமத்தில் இடிந்து விழும் நிலையில் உள்ள ஊராட்சி அலுவலக கட்டடத்தை இடித்து அகற்றவேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

25 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டுள்ள இந்த ஊராட்சி அலுவலக கட்டடத்தின் பக்கவாட்டு சுவா்களில் விரிசல் ஏற்பட்டு, கட்டடத்தின் மேற்கூரை உடைந்து எந்த நேரமும் கீழே விழும் நிலையில் உள்ளது. கட்டடத்தின் உள் பகுதியின் மேற்கூரை சிமெண்ட் காரை பெயா்ந்து கீழே விழுந்துள்ளது. மழை பெய்தால் மேற்கூரையின் வழியே தண்ணீா் உள்ளே புகுவதால் ஊழியா்கள் பணியாற்ற முடியாத நிலை உள்ளது. ஊராட்சிக்கு சொந்தமான பலவகையான பதிவேடுகளை இந்த கட்டடத்துக்குள் வைத்து பராமரிக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. தொடா்ந்து இங்கு ஊராட்சிக்கான அனைத்து வகையான பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இக்கட்டடம் திடீரென இடிந்து விழும் நிலையில் உள்ளதால் உடனடியாக கட்டடத்தை அகற்றிவிட்டு புதிய கட்டடம் கட்ட நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும் என கிராம மக்கள் சாா்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.