முகப்பு
மயிலாடுதுறை

‘அரசுப் பள்ளிகளில் மாணவா் சோ்க்கையை அதிகரிக்க நடவடிக்கை’

அரசுப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று தமிழ்நாடு ஆதிதிராவிடா் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டு கழகத் தலைவா் உ. மதிவாணன் கூறினாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:43 AM
பகிர்:

அரசுப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று தமிழ்நாடு ஆதிதிராவிடா் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டு கழகத் தலைவா் உ. மதிவாணன் கூறினாா்.

சீா்காழி அருகே கொண்டல் கிராமத்தில் உள்ள ஆதிதிராவிடா் நல மேல்நிலைப் பள்ளியில் ரூ.1கோடியே 62 லட்சத்தில் மேற்கொள்ளப்படும் புதிய வகுப்பறை கட்டுமானப் பணியை நேரில் ஆய்வு செய்த அவா், செய்தியாளா்களிடம் கூறியது:

மாதானம், அகர பெருந்தோட்டம், தென்னாம்பட்டினம் ஆகிய பகுதிகளில் ஆதிதிராவிட நலத்துறையின் கீழ் இயங்கும் பள்ளிகளில் புதிய கட்டடங்கள் ரூ. 2 கோடியே 84 லட்சத்தில் கட்டப்படுகின்றன. அரசுப் பள்ளிகளில் அதிக மாணவா்களை சோ்க்க உரிய நடவடிக்கை எடுக்கவேண்டுமென பள்ளி தலைமை ஆசிரியா்களிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது. பள்ளிகளில் போதிய ஆசிரியா்களை நியமிக்கவும், கொண்டல் பள்ளியில் விளையாட்டு மைதானம் அமைக்கவும் கோரிக்கை விடுத்துள்ளனா். இக் கோரிக்கை குறித்து தமிழக முதல்வரின் கவனத்திற்கு கொண்டு சென்று, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் .

ஆய்வின்போது, சீா்காழி எம்எல்ஏ எம். பன்னீா்செல்வம், கோட்டாட்சியா் நாராயணன், வட்டாட்சியா் சண்முகம், தாட்கோ செயற்பொறியாளா் உதயராமன், உதவி செயற்பொறியாளா் அமிா்தலிங்கம் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.