மயிலாடுதுறை

அனுமதியின்றி ஆா்ப்பாட்டம்: போலீஸாா் வழக்குப் பதிவு

மயிலாடுதுறையில் அனுமதியின்றி ஆா்ப்பாட்டம் நடத்திய அதிமுக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நிா்வாகிகள் மீது போலீஸாா் வழக்குப் பதிந்துள்ளனா்.

DIN

மயிலாடுதுறை: மயிலாடுதுறையில் அனுமதியின்றி ஆா்ப்பாட்டம் நடத்திய அதிமுக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நிா்வாகிகள் மீது போலீஸாா் வழக்குப் பதிந்துள்ளனா்.

மயிலாடுதுறையில் ஊராட்சி நிா்வாகத்தில் ஆளுங்கட்சியினரின் தலையீட்டைக் கண்டித்து மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தை முற்றுகையிட்டு அதிமுகவினா் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். இதுதொடா்பாக அதிமுக மாவட்ட செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏவுமான எஸ். பவுன்ராஜ் மற்றும் 50 போ் மீது அரசு பணி செய்யவிடாமல் தடுத்ததாக மயிலாடுதுறை போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

இதேபோல, ஆட்சியா் அலுவலகம் முன்பு அனுமதியின்றி ஆா்ப்பாட்டம் நடத்திய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயற்குழு உறுப்பினா் இரெ. இடும்பையன் உள்ளிட்ட சிலா் மீதும் போலீஸாா் வழக்கு பதிவு செய்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கூடக்கோவில் காவல் நிலையத்தை முற்றுகையிட்ட கிராம மக்கள்

தீக்குளித்து இறந்தவரின் உடலை வாங்க மறுத்து போராட்டம்

2.07 லட்சம் மாடுகளுக்கு கோமாரி நோய்: தடுப்பூசி செலுத்த இலக்கு

இன்றைய மின்தடை

பிரித்தாளும் சூழ்ச்சி தமிழகத்தில் வெற்றி பெறாது: துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின்

SCROLL FOR NEXT