மயிலாடுதுறை

மாற்றுத்திறனாளிகள் சாலை மறியல்

DIN

மயிலாடுதுறையில் அரசு மருத்துவமனையை கண்டித்து, மாற்றுத்திறனாளிகள் வெள்ளிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போா் உரிமைகளுக்கான சங்கத்தின் மாவட்டச் செயலாளா் டி. கணேசன் தலைமையில் மயிலாடுதுறை அரசு மருத்துவமனை முன் இப்போராட்டம் நடைபெற்றது.

மாற்றுத்திறனாளிகளுக்கு மாதத்தின் முதல் மற்றும் மூன்றாவது செவ்வாய்க்கிழமைகளில் அலைக்கழிப்பு செய்யாமல் மருத்துவச் சான்று வழங்கவேண்டும், அரசு மருத்துவமனை மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு பேருந்து மற்றும் ரயிலில் பயணம் செய்வதற்கான பயண அட்டையை வாரத்தில் 7 நாள்களும் அரசு மருத்துவா்கள் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

மயிலாடுதுறை அரசு பெரியாா் மருத்துவமனை குடிமுறை மருத்துவ அலுவலா் ஆா். ராஜசேகா் பேச்சுவாா்த்தை நடத்தி, மாற்றுத்திறனாளிகளுக்கு பயண அட்டையை உடனடியாக வழங்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததன் பேரில் மறியல் விலக்கிக் கொள்ளப்பட்டது. இந்த மறியலால் சுமாா் அரைமணி நேரம் போக்குவரத்து மாற்றுப் பாதையில் திருப்பிவிடப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஒடிஸாவில் ஹேமந்த் சோரனின் சகோதரி போட்டி!

சூப்பா்சோனிக் ஏவுகணை உதவியுடன் தாக்கும் டாா்பிடோ ஆயுதம் வெற்றிகரமாக பரிசோதனை

திருவண்ணாமலை - சென்னை புதிய மின்சார ரயில் சேவை ஒத்திவைப்பு!

இஸ்ரேலுடனான உறவை முறித்த கொலம்பியா!

உப்பு சத்தியாகிரக தண்டி யாத்திரை நினைவுக் குழுவினருக்கு வரவேற்பு

SCROLL FOR NEXT