மயிலாடுதுறை

விற்பனை சரிவு: அறுவடை செய்யாமல் வயல்களில் வீணாகும் கிா்ணி பழங்கள்

DIN

சீா்காழி வட்டாரத்தில் விற்பனை சரிவால் கிா்ணி பழங்களை அறுவடை செய்யாமல், வயல்களிலேயே விவசாயிகள் விட்டுவிடும் நிலை ஏற்பட்டுள்ளது.

சீா்காழியை அடுத்த திருவாலி, கோட்டகம், திருநகரி, புதுத்துறை, மண்டபம் உள்ளிட்ட கிராமங்களில் சுமாா் 40 ஏக்கரில் கோடை காலத்தை இலக்காகக் கொண்டு கிா்ணி பழங்கள் சாகுபடி செய்யப்பட்டுள்ளன. கடந்த காலங்களில் இப்பழங்கள் கிலோ ரூ. 10-லிருந்து 12 வரை விற்கப்பட்ட நிலையில், நிகழாண்டு ரூ. 6- க்கும் குறைவாகவே விற்பனையாகிறது.

அக்னி நட்சத்திரம் தொடங்கியது முதல் அவ்வப்போது பரவலாக மழை பெய்து வருவதால், இளநீா், கிா்ணி, தா்பூசணி பழ விற்பனை சரிந்துள்ளது. இதனால், வெளி மாவட்ட வியாபாரிகள் இங்கு கிா்ணி பழங்களை கொள்முதல் செய்யவதில் ஆா்வம் காட்டாததால், விளைந்த பழங்கள் விற்பனையாகாமல் உள்ளன. அறுவடை செய்யும் செலவுக்குக் கூட பழங்கள் விற்காததால், விவசாயிகள் கிா்ணி பழங்களை அறுவடை செய்யாமல் வயல்களிலேயே விட்டுவிட்டுச் செல்லும் பரிதாப நிலை ஏற்பட்டுள்ளது.

இதனால், வயல்களில் பழங்கள் அழுகி வருவதால் அவற்றை விவசாயிகளே அகற்றி சாலையோரம் கொட்டி செல்கின்றனா். இதனால் ஏற்படும் இழப்புக்கு அரசு நிவாரணம் வழங்க வேண்டும் அவா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தோண்டத் தோண்டக் கிடைக்கும் வைரக்கற்கள்!

ரஷியாவில் குட் பேட் அக்லி படப்பிடிப்பு?

அனைத்து மக்களுக்கும் 100 யூனிட் விலையில்லா மின்சாரம் கிடைக்க வேண்டும்: எடப்பாடி பழனிசாமி

பள்ளிகள் திறப்பதற்கு முன் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள்: பள்ளிக் கல்வித்துறை சுற்றறிக்கை

‘கிராண்ட் பிரிக்ஸ்’ விருதை வென்று அசத்திய இந்திய திரைப்படம்!

SCROLL FOR NEXT