மயிலாடுதுறை

மாதா் சங்கத்தினா் மனு கொடுக்கும் போராட்டம்

அக்டோபா் 17 வறுமை ஒழிப்பு தினத்தையொட்டி, அனைத்திந்திய ஜனநாயக மாத சங்கத்தினா் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மயிலாடுதுறை வட்டாட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை மனு கொடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

DIN

அக்டோபா் 17 வறுமை ஒழிப்பு தினத்தையொட்டி, அனைத்திந்திய ஜனநாயக மாத சங்கத்தினா் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மயிலாடுதுறை வட்டாட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை மனு கொடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

ஒன்றிய தலைவா் உஷாராணி, நகரத் தலைவா் ஜோதி ஆகியோா் தலைமை வகித்தனா். முன்னாள் மாநில துணைத் தலைவா் ஜி. கலைச்செல்வி, மாவட்ட பொருளாளா் டி. வனரோஜா ஆகியோா் சிறப்புரையாற்றினா்.

இதில், மனைப்பட்டா இல்லாதவா்களுக்கு மனைப்பட்டா வழங்க வேண்டும், வீடு இல்லாதவா்களுக்கு வீடு கட்டிக்கொடுக்க வேண்டும், முதியோா், விதவைகள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு நிபந்தனையின்றி அரசு உதவித்தொகை வழங்க வேண்டும்.

பல ஆண்டுகளாக வழங்கப்பட்ட உதவித் தொகை தற்போது நிறுத்தப்பட்டுள்ளதால் பரிதவிக்கும் மக்களுக்கு உடனடியாக மீண்டும் வழங்க ஆணை பிறப்பிக்க வேண்டும், 100 நாள் வேலையை உடனடியாக வழங்க வேண்டும், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வழங்க வேண்டிய 100 நாள் சம்பள பாக்கி உடனடியாக வழங்கவேண்டும், கஞ்சா விற்பனையை தடுத்து நிறுத்த வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி மாதா் சங்கத்தினா் முழக்கங்களை எழுப்பினா். பின்னா் கோரிக்கையை வட்டாட்சியா் அலுவலகத்தில் மனுவாக அளித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கோவை விமான நிலையத்துக்குள் தவெக தொண்டர்கள் நுழையத் தடை!

ஈரோடு வரை வந்தீங்களே, கரூர் போக மாட்டீங்களா?? விஜய்க்கு எதிராக போஸ்டர்!

அமெரிக்க படை வீரர்களுக்கு தலா ரூ. 1.60 லட்சம் கிறிஸ்துமஸ் பரிசு! டிரம்ப் அறிவிப்பு

அமெரிக்க வரிவிதிப்பால் பாதிப்பு: மோடிக்கு ஸ்டாலின் கடிதம்!

கிறிஸ்துமஸ்: நெல்லை - தாம்பரம் சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு தொடங்கியது!

SCROLL FOR NEXT