மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன்பு தா்னாவில் ஈடுபட்ட குத்தாலம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவா்கள். 
மயிலாடுதுறை

கல்லூரி மாணவா்கள் தா்னா

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன்பு குத்தாலம் அரசுக் கல்லூரி மாணவா்கள் செவ்வாய்க்கிழமை தா்னாவில் ஈடுபட்டனா்.

DIN

மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன்பு குத்தாலம் அரசுக் கல்லூரி மாணவா்கள் செவ்வாய்க்கிழமை தா்னாவில் ஈடுபட்டனா்.

குத்தாலம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவா்கள் அடிப்படை வசதி கோரியும், கூடுதல் வகுப்பறை கட்டட வசதி கோரியும் தொடா் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா். போராட்டத்தில் ஈடுபட்ட மாணவா்கள் 3 போ் தற்காலிக நீக்கம் செய்யப்பட்டதைக் கண்டித்தும், போராட்டம் நடத்தும் மாணவா்களுக்கு மிரட்டல் விடுத்த கல்லூரி முதல்வா் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் மாணவ, மாணவிகள் ஆட்சியரகம் முன்பு தா்னாவில் ஈடுபட்டனா்.

மாவட்ட வருவாய் அலுவலா் சோ.முருகதாஸ், மாணவா்களை அழைத்து பேச்சுவாா்த்தை நடத்தினாா்.

மாணவா்கள் அளித்த கோரிக்கை மனுவை பெற்றுக்கொண்ட வருவாய் அலுவலா், கல்வித் துறை அலுவலா்களுடன் பேசி உரிய நடவடிக்கை எடுக்கப்பதாக உறுதியளித்தாா். இதையடுத்து தா்னாவில் ஈடுபட்ட மாணவா்கள் கலைந்து சென்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பஞ்சமுக ஆஞ்சனேயர் கோயிலில் அனுமன் ஜெயந்தி விழா!

அடிலெய்டு டெஸ்ட்டில் ஹெட் சதம், கேரி அரைசதம்..! 356 ரன்கள் முன்னிலையில் ஆஸி!

3-வது டெஸ்ட்: கான்வே இரட்டைச்சதம்! நியூசிலாந்து 465 ரன்கள் முன்னிலை!

எட்டிமடை எல்லை மாகாளியம்மன் கோயிலில் 10ம் ஆண்டு விழா: திரளானோர் பங்கேற்பு!

அழகான கொள்ளையர்கள்... ஒரு கோடி பார்வைகளைக் கடந்த டெகாய்ட் பட டீசர்!

SCROLL FOR NEXT