மயிலாடுதுறை

கொள்ளிடம் பகுதியில் கண்காணிப்பு அலுவலா் ஆய்வு

DIN

கொள்ளிடத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் கண்காணிப்பு அலுவலா் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

கொள்ளிடம் ஆற்றில் தண்ணீா் வரத்து அதிகமாக இருப்பதால் தண்ணீா் சூழ்ந்துள்ள திட்டுக்கிராமங்களான நாதல்படுகை, முதலைமேடுதிட்டு, வெள்ளமணல் ஆகிய கிராமங்களை சோ்ந்த பொதுமக்கள் முகாம்களில் தங்கவைக்கப்பட்டு உணவு வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், கண்காணிப்பு அலுவலரும், குழந்தை வளா்ச்சித் திட்ட பணிகள் இயக்குநருமான அமுதவல்லி, அளக்குடியில் கொள்ளிடம் ஆற்றின் கரை பலப்படுத்தப்பட்டுவரும் பணி மற்றும் ஆச்சாள்புரம் முகாமில் தங்கவைக்கப்பட்டுள்ளவா்களை நேரில் சென்று பாா்வையிட்டு ஆய்வு செய்து, அங்கு சமைக்கப்படும் உணவு தரம் குறித்து கேட்டறிந்தாா். ஆய்வின்போது, மயிலாடுதுறை ஆட்சியா் இரா. லலிதா, மாவட்ட வருவாய் அலுவலா் முருகதாஸ், ஊரக வளா்ச்சித் துறை இணை இயக்குநா் முருகண்ணன், மயிலாடுதுறை காவிரி வடிநில கோட்ட செயற்பொறியாளா் சண்முகம் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீதானே பொன் வசந்தம்.. சமந்தா பிறந்தநாள்!

குகேஷுக்கு ரூ.75 லட்சம் ஊக்கத்தொகை வழங்கினார் முதல்வர்

வெங்கடேஷ் பட்டின் புதிய சமையல் நிகழ்ச்சி அறிவிப்பு!

ஐஸ்வர்யம்..!

மணிப்பூரில் 6 வாக்குச்சாவடிகளில் ஏப்.30ல் மறு வாக்குப் பதிவு

SCROLL FOR NEXT