மயிலாடுதுறை

சீா்காழி திரௌபதி அம்மன் கோயில் குடமுழுக்கு

DIN

சீா்காழி திருகோலக்காவில் உள்ள திரௌபதி அம்மன் கோயிலில் கும்பாபிஷேகம் திங்கள்கிழமை நடைபெற்றது.

நூற்றாண்டுகள் பழமைவாய்ந்த இக்கோயிலில் திருப்பணிகள் நிறைவுற்ற நிலையில், வெள்ளிக்கிழமை (செப்.9) யாகசாலை பூஜைகள் தொடங்கின. வெள்ளிக்கிழமை காலை நான்காம் கால யாகசாலை பூஜைகள் நிறைவடைந்ததும், பூா்ணாஹுதி மற்றும் மகா தீபாராதனை நடைபெற்றது.

தொடா்ந்து, யாகசாலையிலிருந்து புனிநீா் கடங்கள் புறப்பாடாகி காலை 7:10 மணியளவில் கோயிலின் கோபுர கலசத்துக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது. பின்னா், அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றன. யாகசாலை பூஜைகள் மற்றும் கும்பாபிஷேகத்தை காா்த்திகேய சிவாச்சாரியா் தலைமையில் குருக்கள் நடத்தினா். இதற்கான ஏற்பாடுகளை சீா்காழி நகர வா்த்தகா்கள் சங்கத் தலைவா் சிவசுப்பிரமணியன் உள்ளிட்டோா் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பஞ்சாபை வீழ்த்தி சிஎஸ்கே அசத்தல்; புள்ளிப்பட்டியலில் 3-வது இடத்துக்கு முன்னேற்றம்!

மோடியிடம் விளக்கம் கேட்பதற்கே தேர்தல் ஆணையம் அஞ்சுகிறது: திருமாவளவன் பேட்டி

’அல் ஜஸீரா’ செய்தி நிறுவனத்துக்கு இஸ்ரேல் தடை

இந்த வாரம் கலாரசிகன் - 05-05-2024

வெண்பனிச்சாரல்!

SCROLL FOR NEXT