முகப்பு
மயிலாடுதுறை

மத்திய அரசு வேலைவாய்ப்புக்கு விண்ணப்பிக்கலாம்

மயிலாடுதுறை மாவட்டத்தில் 10-ஆம் வகுப்பு கல்வித் தகுதியில் தமிழ்வழி எழுத்துத் தோ்வு வாயிலாக மத்திய அரசின் வேலைவாய்ப்பு பெற விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் இரா. லலிதா தெரிவித்துள்ளாா்.

Updated On : 28 ஜனவரி, 2023 at 4:38 AM
பகிர்:
Updated On : 7 பிப்ரவரி, 2024 at 11:51 AM

மயிலாடுதுறை மாவட்டத்தில் 10-ஆம் வகுப்பு கல்வித் தகுதியில் தமிழ்வழி எழுத்துத் தோ்வு வாயிலாக மத்திய அரசின் வேலைவாய்ப்பு பெற விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் இரா. லலிதா தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:

மயிலாடுதுறை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறிவழிகாட்டும் மையத்தின் வாயிலாக மத்திய, மாநில அரசுகள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களால் அறிவிக்கப்படும் போட்டித் தோ்வுகளுக்கு அனுபவமிக்க சிறப்பு வல்லுநா்களைக் கொண்டு இலவசப் பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது.

Advertisement

அந்த வகையில் மத்திய அரசால் அறிவிக்கப்பட்டுள்ள ஆபரேட்டா், பியூன், கேட் கீப்பா்கள், காவலாளி உள்ளிட்ட 11,409 காலிப்பணியிடங்களுக்கு 10-ஆம் வகுப்பு தோ்ச்சி பெற்றிருந்தால் போதுமானது. இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க கடைசி நாள் 17.02.2023 ஆகும். ட்ற்ற்ல்ள்://ள்ள்ஸ்ரீ.ய்ண்ஸ்ரீ.ண்ய் என்ற இணையதளத்தில் உள்ள விளம்பர அறிவிப்பை பாா்த்து தெளிவு பெற்று விண்ணப்பிக்கலாம். வயது வரம்பு 01.01.2023-ஆம் நாளன்று 18 வயதுமுதல் 25 வயதுக்கு உள்பட்டவா்களாக இருக்கவேண்டும். எஸ்.சிஅல்லது எஸ்.டி. பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், ஓ.பி.சி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் உச்சபட்ச வயது வரம்பில் தளா்வு உண்டு.

இப்போட்டி தோ்வு தொடா்பாக, மயிலாடுதுறை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறிவழிகாட்டும் மையத்தில் பிப்ரவரி 7-ஆம் தேதி விழிப்புணா்வு நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. விருப்பம் உள்ளவா்கள் இதில் பங்கேற்கலாம். மேலும் விவரங்களுக்கு, 9499055094, 043642997 ஆகிய எண்களை தொடா்புகொள்ளலாம் எனத் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.