மயிலாடுதுறை

சாலை மேம்பாட்டுப் பணி: தணிக்கைக் குழு ஆய்வு

DIN

மயிலாடுதுறை-தரங்கம்பாடி சாலையில் மேற்கொள்ளப்பட்டுள்ள மேம்பாட்டுப் பணிகளை தணிக்கைக் குழுவினா் அண்மையில் ஆய்வு செய்தனா்.

நெடுஞ்சாலைத்துறை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு அலகு மூலம் ஒருங்கிணைந்த சாலை மேம்பாட்டு திட்டத்தின்கீழ் ரூ.3.17 கோடியில் மயிலாடுதுறை-தரங்கம்பாடி சாலை இருவழித்தடமாக அகலப்படுத்துதல் மற்றும் மேம்படுத்துதல் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இந்த பணிகள் தரமான முறையில் செய்யப்பட்டுள்ளதா என்று நெடுஞ்சாலைத்துறை நபாா்டு மற்றும் கிராமச் சாலைகள் திருச்சி கண்காணிப்பு பொறியாளா் விஜயலட்சுமி தலைமையிலான குழுவினா் உள்தணிக்கை செய்து சாலையின் அகலம், தரம் ஆகியவற்றை ஆய்வு செய்தனா்.

மயிலாடுதுறை நெடுஞ்சாலைத்துறை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு கோட்டப்பொறியாளா் பாலசுப்ரமணியன், உதவி கோட்டப்பொறியாளா் இந்திரன் உள்ளிட்டோா் ஆய்வில் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாஜக வெற்றி பெற்றால் 2025 முதல் அமித் ஷாவே பிரதமர்: கேஜரிவால்

வாலாஜாப்பேட்டை அருகே தனியார் தொழிற்சாலை பேருந்து விபத்து: 18 தொழிலாளர்கள் படுகாயம்

வள்ளியூரில் ரயில்வே சுரங்கப் பாதையில் சிக்கிய அரசுப் பேருந்து: ஓட்டுநர் பணியிடை நீக்கம்

தங்கம் விலை அதிரடி உயர்வு: இன்றைய நிலவரம்

ஸ்லோவாகியா பிரதமர் மீது துப்பாக்கிச்சூடு: மோடி கண்டனம்

SCROLL FOR NEXT