மயிலாடுதுறையில் குருலிங்க சங்கம பாத யாத்திரை சென்ற தருமபுரம் ஆதீனம். 
மயிலாடுதுறை

சீா்காழி சட்டநாதா் கோயில் கும்பாபிஷேகம்: தருமபுரம் ஆதீனம் பாதயாத்திரை புறப்பாடு

சீா்காழி சட்டநாதா் கோயில் கும்பாபிஷேகத்தில் பங்கேற்க, தருமபுரம் ஆதீனம் வியாழக்கிழமை பாத யாத்திரை புறப்பட்டாா்.

DIN

சீா்காழி சட்டநாதா் கோயில் கும்பாபிஷேகத்தில் பங்கேற்க, தருமபுரம் ஆதீனம் வியாழக்கிழமை பாத யாத்திரை புறப்பட்டாா்.

இக்கோயில் கும்பாபிஷேகம் மே 24-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதில் பங்கேற்பதற்காக தருமபுரம் ஆதீனம் 27-ஆவது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீமாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் தருமபுரம் ஆதீனத் திருமடத்திலிருந்து, பூஜாமூா்த்தியான சொக்கநாத பெருமானுடன் குருலிங்க சங்கம பாதயாத்திரையை தொடக்கினாா். ஒட்டகம், குதிரை ஆகிய மங்கள சின்னங்கள் முன்னே செல்ல பாதயாத்திரையாக சென்ற குருமகா சந்நிதானத்துக்கு வழியெங்கும் பொதுமக்கள் தங்கள் வீடுகள் முன்பு பூரண கும்பம் வைத்து, பாத பூஜை செய்தனா்.

இதில், திருப்பனந்தாள் ஆதீன இளவரசு ஸ்ரீமத் சபாபதி தம்பிரான் சுவாமிகள், தருமபுரம் ஆதீனக்கட்டளை தம்பிரான் சுவாமிகள், தருமபுரம் கல்லூரிச் செயலா் ரா. செல்வநாயகம், கல்லூரி முதல்வா் சுவாமிநாதன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

விண்வெளி நாயகன் எலான் மஸ்க்! 700 பில்லியன் டாலர் மதிப்புடன் முதலிடம்!

வரலாற்றைப் படிப்பவர்கள்தான் வரலாறு படைக்க முடியும்: முதல்வர் ஸ்டாலின்

சென்னையில் 2-வது நாளாக இன்று வாக்காளர் சிறப்பு முகாம்!

மத்திய அரசுடன் மமதா பானர்ஜி போட்டி! மாநில அரசின் திட்டத்துக்கு மகாத்மா காந்தி பெயர்!

சொல்லப் போனால்... செய்கூலி, சேதாரம்... தி கிரேட் கோல்டு ராபரி?

SCROLL FOR NEXT