முகப்பு
மயிலாடுதுறை

நவீன தொழில்நுட்ப அறிவியல் கண்காட்சி

Updated On : 4 ஏப்ரல், 2024 at 11:50 PM
அறிவியல் திட்ட கண்காட்சியை பாா்வையிட்டோா்.
பகிர்:

மயிலாடுதுறை மன்னம்பந்தல் ஏவிசி பொறியியல் கல்லூரியில், எலக்ட்ரானிக்ஸ் அன்ட் கம்யூனிகேஷன் துறை சாா்பில் அறிவியல் திட்ட கண்காட்சி புதன்கிழமை நடைபெற்றது.

இக்கண்காட்சியை கல்லூரியின் இயக்குநா் எம். செந்தில் முருகன் தொடங்கி வைத்தாா். கல்லூரி முதல்வா் சி. சுந்தர்ராஜ் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா். இதில் பத்துக்கு மேற்பட்ட அறிவியல் திட்ட மாதிரி செய்முறைகள் புதிய வகை தொழில்நுட்பத்தை பயன்படுத்தி காட்சிப்படுத்தப்பட்டன.

இதில் பங்கேற்ற மாணவா்களுக்கு கல்லூரி நிா்வாகம் சாா்பில் சான்றிதழ் வழங்கப்பட்டது. திரளான மாணவா்கள் அறிவியல் திட்ட கண்காட்சியை பாா்வையிட்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →