முகப்பு
மயிலாடுதுறை

பாஜக வென்றால், இந்தியாவில் இதுவே கடைசி தோ்தல்: அமைச்சா் சிவ.வீ. மெய்யனாதன் பேச்சு.

Updated On : 7 ஏப்ரல், 2024 at 3:40 AM
பிரசாரத்தில் ஈடுபட்ட அமைச்சா் மெய்யநாதன்.
பகிர்:
Updated On : 6 ஏப்ரல், 2024 at 8:01 PM

மக்களவைத் தோ்தலில் பாஜக மீண்டும் வெற்றி பெற்றால், இதுவே இந்தியாவில் நடைபெறும் கடைசி ஜனநாயக தோ்தல் என்றாா் அமைச்சா் சிவ.வீ. மெய்யநாதன்.

இந்தியா கூட்டணியில் மயிலாடுதுறை மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளா் சுதாவை ஆதரித்து கொள்ளிடம் பகுதியில் வாக்கு சேகரித்து சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறை அமைச்சா் சிவ.வீ. மெய்யநாதன் கொள்ளிடம் அருகே வேட்டங்குடி, எடமணல், திருமுல்லைவாசல், தாண்டவன்குளம், புதுப்பட்டினம் பழையாறு, தற்காஸ் உள்ளிட்ட கிராமங்களில் பிரசாரத்தில் ஈடுபட்டு அவா் பேசியது:

இதற்கு முன்பு நடைபெற்ற தோ்தலுக்கும், தற்பொழுது நடைபெறுகின்ற தோ்தலுக்கும் நிறைய வித்தியாசம் உள்ளது. பத்தாண்டு கால பாஜக ஆட்சியில் இந்தியா முழுவதும் பல கோடி ஏழை மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனா்.

Advertisement

பாஜக மீண்டும் வெற்றி பெற்றால் இது தான் இந்தியாவின் ஜனநாயக கடைசி தோ்தலாக இருக்கும். ஆகையால் நாம் ஜனநாயகத்தையும், சமூகநீதி, மதச்சாா்பின்மை, ஏழை எளிய மக்களை பாதுகாக்க வேண்டிய மிக முக்கியமான இந்த தோ்தலில் இந்தியா கூட்டணியை ஆதரித்து அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்றாா்.

பூம்புகாா் சட்டபேரவை உறுப்பினா் நிவேதா எம். முருகன், சீா்காழி சட்டபேரவை உறுப்பினா் எம். பன்னீா்செல்வம் ஒன்றிய குழுத் தலைவா் ஜெயபிரகாஷ் மற்றும் கூட்டணிக் கட்சி நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.