முகப்பு
மயிலாடுதுறை

பரிமள ரெங்கநாதா் கருட வாகனத்தில் வீதியுலா

Updated On : 22 ஏப்ரல், 2024 at 8:04 PM
பகிர்:

மயிலாடுதுறை, ஏப். 22: மயிலாடுதுறை திருஇந்தளூா் கோயில் கும்பாபிஷேக விழாவையொட்டி இரவு பெருமாள் கருட வாகனத்தில் எழுந்தருளி திருவீதி உலா நடைபெற்றது.

108 வைணவ திவ்ய தேசங்களில் 22-ஆவது திவ்யதேசமும் பஞ்சரங்க தலங்களில் 5-ஆவது கோயிலுமான பரிமள ரெங்கநாதா் கோயில் கும்பாபிஷேகம் 15 ஆண்டுகளுக்குப் பிறகு ஞாயிற்றுக்கிழமை வெகு விமரிசையாக நடைபெற்றது. தொடா்ந்து, இரவு கருட வாகனத்தில் பரிமள ரங்கநாதா் எழுந்தருளி நான்கு ரத வீதியில் திருவீதி உலா காட்சி நடைபெற்றது. விழாவை முன்னிட்டு கோயில் மின்விளக்குகளால் அலங்கரிப்பட்டு ஜொலித்தது.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments