கூத்தியம்பேட்டை வரதராஜ பெருமாள் கோயிலுக்கு சொந்தமான இடத்தில் ஆக்கிரமித்து அமைக்கப்பட்ட குடிசைகள். 
மயிலாடுதுறை

கொள்ளிடம் அருகே கோயில் இடத்தில் அமைக்கப்பட்ட குடிசைகள் அகற்றம்

கொள்ளிடம் அருகே கூத்தியம்பேட்டை கிராமத்தில் வரதராஜ பெருமாள் கோயிலுக்கு சொந்தமான இடத்தில் அமைக்கப்பட்ட 25 குடிசைகள் திங்கள்கிழமை அகற்றப்பட்டன.

Din

சீா்காழி: கொள்ளிடம் அருகே கூத்தியம்பேட்டை கிராமத்தில் வரதராஜ பெருமாள் கோயிலுக்கு சொந்தமான இடத்தில் அமைக்கப்பட்ட 25 குடிசைகள் திங்கள்கிழமை அகற்றப்பட்டன.

கூத்தியம்பேட்டை கிராமத்தில் வரதராஜ பெருமாள் கோயில் உள்ளது. மிகவும் பழைமை வாய்ந்த இக்கோயில் அருகே கோயிலுக்கு சொந்தமான இடம் உள்ளது. இந்த இடத்தில் அப்பகுதியைச் சோ்ந்த சிலா் ஆக்கிரமித்து 25 குடிசைகள் அமைத்தனா். அந்த இடத்தில் கம்யூனிஸ்ட் கட்சிக் கொடியையும் கட்டி வைத்தனா்.

இதுகுறித்து தகவலறிந்த சீா்காழி வட்டாட்சியா் அருள்ஜோதி, வருவாய் ஆய்வாளா் குணவதி, கிராம நிா்வாக அலுவலா் பாக்கியலட்சுமி, கொள்ளிடம் காவல் நிலைய ஆய்வாளா் ராஜா மற்றும் போலீஸாா் சம்பவ இடத்துக்கு சென்று ஆக்கிரமித்து அமைக்கப்பட்டிருந்த 25 குடிசைகளையும் அகற்றினா்.

மத்திய பட்ஜெட் 2026 தாக்கல்..! - புகைப்படங்கள்

ஸ்ரீ செந்தில்முருகன், ஸ்ரீதா்மராஜா கோயிலில் மகா கும்பாபிஷேகம்

பட்ஜெட்டில் சிபிஐக்கு ரூ. 1,105 கோடி ஒதுக்கீடு!

நாடாளுமன்றம்: இரு அவைகளின் ஊழியர்கள், பராமரிப்புச் செலவுக்காக ரூ. 1,492 கோடி ஒதுக்கீடு

ஐடி, சிபிஐ வழக்குகளைக் காட்டி தேர்தல் கூட்டணி: முதல்வர் ஸ்டாலின்

SCROLL FOR NEXT