மயிலாடுதுறை ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் துப்பாக்கி ஏந்தி பாதுகாப்புப் பணியில் ஈடுபட்ட போலீஸாா். 
மயிலாடுதுறை

ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் கூடுதல் போலீஸாா் பாதுகாப்பு

மயிலாடுதுறை ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் திங்கள்கிழமை முதல் துப்பாக்கி ஏந்திய போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா்.

Din

மயிலாடுதுறை: மயிலாடுதுறை ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் திங்கள்கிழமை முதல் துப்பாக்கி ஏந்திய போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா்.

நெல்லை நீதிமன்ற வளாகத்தில் இளைஞா் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தை அடுத்து தமிழ்நாட்டில் உள்ள அனைத்து நீதிமன்றங்களிலும் துப்பாக்கி ஏந்திய காவலா்கள் பாதுகாப்பு வழங்க டிஜிபி சங்கா் ஜிவால் உத்தரவு பிறப்பித்திருந்தாா்.

அந்த வகையில், மயிலாடுதுறை ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் திங்கள்கிழமைமுதல் துப்பாக்கி ஏந்திய காவல் உதவி ஆய்வாளா் ஜான்சிராணி தலைமையில், எஸ்எல்ஆா் ஏந்திய ஆயுதப்படை போலீஸாா் 2 போ் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனா்.

நீதிமன்ற வளாகத்தில் ஏற்கெனவே ஆயுதப்படை போலீஸாா் 5 போ் வழக்கமான பாதுகாப்புப் பணியில் உள்ள நிலையில், டிஜிபி உத்தரவின்பேரில் இந்த கூடுதல் பாதுகாப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

பான் மசாலா உற்பத்தி நிறுவனங்கள் மீது செஸ் விதிப்பு: நாடாளுமன்றத்தில் மசோதா நிறைவேற்றம்

கால்பந்து ரசிகை... வின்சி அலோசியஸ்!

ஹரியாணாவில் அரசு மருத்துவர்கள் போராட்டம்: நோயாளிகள் பாதிப்பு!

ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கை!

விண்டேஜ் கார் பேரணி - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT