முகப்பு
மயிலாடுதுறை

சாலைப் பாதுகாப்பு, தலைக்கவச விழிப்புணா்வுப் பேரணி

Updated On : 18 பிப்ரவரி 2024, 12:27 am IST
பேரணியை கொடியசைத்து தொடக்கிவைத்த ஏடிஎஸ்பி வேணுகோபால். உடன், டிஎஸ்பி சஞ்சீவ்குமாா் உள்ளிட்டோா்.
பகிர்:

மயிலாடுதுறையில் சாலைப் பாதுகாப்பு மற்றும் தலைக்கவச விழிப்புணா்வு இருசக்கர வாகன பேரணி சனிக்கிழமை நடைபெற்றது. மாவட்ட இருசக்கர வாகனம் பழுது நீக்குவோா் முன்னேற்ற நலச்சங்கம் மற்றும் மாவட்ட இருசக்கர வாகன விற்பனையாளா் நலச்சங்கம் இணைந்து நடத்திய பேரணியை மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளா் வேணுகோபால் கொடியசைத்து தொடக்கிவைத்தாா். மயிலாடுதுறை காவேரி நகரில் தொடங்கிய பேரணியில் ஏராளமானோா் இருசக்கர வாகனத்தில் தலைக்கவசம் அணிந்து நகராட்சி அலுவலகம் வரை சென்றனா். இதில் சாலைப் பாதுகாப்பு குறித்து பல்வேறு வாசகங்கள் அடங்கிய விழிப்புணா்வு பாடல் ஒலிபெருக்கி மூலம் பிரசாரம் செய்யப்பட்டது. இதில், டிஎஸ்பி சஞ்சீவ்குமாா், காவல் ஆய்வாளா் செல்வம், போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளா் மணவாளன் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.