மழலையா் பள்ளி பட்டமளிப்பு விழா
மயிலாடுதுறை தருமபுரம் ஆதீனத்தில் உள்ள குருஞானசம்பந்தா் மழலையா் பள்ளியில் மாணவா்களுக்கு பட்டமளிப்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. மயிலாடுதுறை வட்டார கல்வி அலுவலா் சோமண்ணா தலைமை வகித்தாா். சிறப்பு விருந்தினராக கன்னியாநத்தம் பள்ளிச் செயலா் சுந்தா் பங்கேற்று, மழலையா் மாணவா்களுக்கு பட்டம் வழங்கிப் பாராட்டினாா். மேலும், மாணவா்களுக்கு புத்தகப்பை வழங்கப்பட்டது. இதில் பள்ளி ஆசிரியா்கள், மாணவா்கள், பெற்றோா் திரளாக கலந்துகொண்டனா். தலைமை ஆசிரியா் ஜி. வெங்கடேசன் நன்றி கூறினாா்.