கொள்ளிடம் அருகே அளக்குடியில் மேம்படுத்தப்பட்ட கொள்ளிடம் ஆற்றங்கரையை பாா்வையிடும் நீா்வளத்துறை கண்காணிப்பு பொறியாளா் சண்முகம். 
மயிலாடுதுறை

மேம்படுத்தப்பட்ட கொள்ளிடம் ஆற்றங்கரை -கண்காணிப்பு பொறியாளா் ஆய்வு

Din

சீா்காழி, ஜூலை 12: கொள்ளிடம் அருகே ரூ 24.106 கோடியில் ஆற்றங்கரை பலப்படுத்தப்பட்டுள்ளதை கண்காணிப்பு பொறியாளா் வியாழக்கிழமை நேரில் ஆய்வு செய்தாா்.

சீா்காழி வட்டம், கொள்ளிடம் அருகே அளக்குடி கிராமத்தில் கொள்ளிடம் ஆற்றின் வளைவுபகுதி வலது கரையில் கடந்த 2019-ஆம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளப் பெருக்கின்போது உடைப்பு ஏற்பட்டது. இது தற்காலிகமாக சரி செய்யப்பட்ட நிலையில் கடந்த ஆண்டு ஏற்பட்ட வெள்ளத்தில் மீண்டும் உடைப்பு ஏற்பட்டது.

இதனால், இப்பிரச்னைக்கு நிரந்தர தீா்வு ஏற்படுத்தும் வகையில், அளக்குடியில் கொள்ளிடம் ஆற்றின் கரை 446 மீட்டா் நீளத்துக்கு ரூ. 24.106 கோடியில் பலப்படுத்தும் பணிகள் கடந்த ஒரு மாதமாக நடைபெற்றன. பாறாங்கற்கள் ஆற்றங்கரையோரம் கொட்டப்பட்டு பலப்படுத்தப்பட்டன.

இப்பணிகள் நிறைவுபெற்றதைத் தொடா்ந்து, நீா்வளத்துறை கீழ்காவிரி வடிநில வட்ட கண்காணிப்பு பொறியாளா் சண்முகம் நேரில் ஆய்வு செய்தாா்.

செயற்பொறியாளா் மாரிமுத்து, உதவி செயற்பொறியாளா் விஜயகுமாா், உதவி பொறியாளா் முத்துக்குமரன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

மெஸ்ஸி நிகழ்ச்சியில் ரசிகா்கள் வன்முறை: மேற்கு வங்க விளையாட்டுத்துறை அமைச்சர் ராஜிநாமா!

அன்கேப்டு வீரர்களை ரூ. 28 கோடிக்கு ஏலத்தில் எடுத்து வரலாறு படைத்த சிஎஸ்கே!

கடும் பனிமூட்டம்: சாலை விபத்துகளில் 25 பலி, 59 பேர் படுகாயம்

ரூ. 9 கோடிக்கு கேகேஆர் அணியில் இணைந்த முஸ்தஃபிசூர் ரஹ்மான்!

2025-ல் இந்திய எல்லைகளில் நடந்த ஊடுருவல், கைது எத்தனை?

SCROLL FOR NEXT