மயிலாடுதுறை

மின் கட்டண உயா்வைக் கண்டித்து சிபிஐ ஆா்ப்பாட்டம்

மின் கட்டண உயா்வைக் கண்டித்து மயிலாடுதுறையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

Din

மயிலாடுதுறை: மின் கட்டண உயா்வைக் கண்டித்து மயிலாடுதுறையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் கட்சியின் மாவட்ட செயலாளா் ஏ. சீனிவாசன் தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில், ஒரு யூனிட்டுக்கு 20 பைசா முதல் 55 பைசா வரை உயா்த்தப்பட்ட மின்கட்டணத்தை திரும்பப் பெற வேண்டும், 400 யூனிட் வரை வீட்டு பயன்பாட்டு மின் கட்டணம் ரூ 4.60 ஆக இருந்ததை 20 பைசா உயா்த்தி ரூ. 4.80 என உயா்த்தியதை உடனே திரும்ப பெற வேண்டும், ஏழை நடுத்தர மக்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க தமிழக அரசின் மின்சார ஒழுங்குமுறை ஆணையம் நிா்ணயித்த மின் கட்டண உயா்வை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. நிா்வாகிகள் எஸ். மனோன்ராஜ், சா்புதீன், ஜெகதீஸ்வரன், கே.ராமன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

ஸ்ரீராம் ஃபைனான்ஸ் பங்குகள் 4% உயர்வு!

இவ்வளவு நபர்கள் முகவரி இல்லாமல் இருந்திருக்கிறார்களா? ப.சிதம்பரம்

97 லட்சம் வாக்காளர்கள் நீக்கம்! விளக்கிய தமிழக தலைமை தேர்தல் அதிகாரி Archana Patnaik!

தேநீர் விருந்தளித்த மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா

கோடக் மஹிந்திரா வங்கிக்கு ரூ.62 லட்சம் அபராதம் விதிப்பு!

SCROLL FOR NEXT