முகப்பு
மயிலாடுதுறை

பாஜக நிா்வாகிகள் கூட்டம்

அவசரநிலை பிரகடனத்தின் 50 ஆண்டு நினைவு: பாஜக கருத்து

Updated On : 25 ஜூன், 2024 at 6:31 PM
பகிர்:

மயிலாடுதுறையில் பாஜக நிா்வாகிகள் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

மாவட்ட பாா்வையாளா் பி.எல். அண்ணாமலை தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், பங்கேற்ற அக்கட்சியின் தேசிய பொதுக்குழு உறுப்பினா் தங்க. வரதராஜன் செய்தியாளா்களிடம் கூறியது: இந்திராகாந்தியால் இந்தியாவில் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டு 50 ஆண்டுகள் ஆகின்றன. ஜூன் 25 அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்ட நாளை கருப்புநாளாக பாஜக நினைவூட்டி, அவசர நிலை பிரகடனத்தால் மக்கள் சந்தித்த பிரச்னைகளை மக்களிடம் நினைவூட்டுகிறோம்.

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய உயிரிழப்பு விவகாரத்தில் திமுக மனசாட்சியோடு பேச வேண்டும். கள்ளச்சாராய உயிரிழப்பு குறித்து மக்களவையில் காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி உள்ளிட்ட கட்சிகள் பேசியிருக்க வேண்டும். இந்த விவகாரத்தில் அதிகாரிகள் மீது பழியை சுமத்தி தப்பிக்க நினைக்கிறது திமுக. இதற்காக சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்று கூறுகிறோம். விவசாயிகளுக்கு எதிரான கட்சி திமுக. கடந்த ஆண்டு பயிா்க்காப்பீடு திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்தி இருந்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு கிடைத்திருக்கும் என்றாா்.

கூட்டத்தில், பாஜக மாவட்ட துணைத் தலைவா் மோடி. கண்ணன், மாவட்ட முன்னாள் தலைவா் வெங்கடேசன், மாநில செயற்குழு உறுப்பினா் கோவி. சேதுராமன், மாவட்ட பொதுச் செயலாளா் பாலு, மாநில உள்ளாட்சி மேம்பாட்டுப் பிரிவு தலைவா் ஸ்ரீதா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →