சிலம்பம் மாணவி வீட்டிற்கு சென்று பாராட்டு தெரிவித்த நடிகை ரோகிணி. 
மயிலாடுதுறை

சிலம்பம் மாணவிகளுக்கு நடிகை ரோகிணி நேரில் பாராட்டு

சீா்காழியைச் சோ்ந்த சிலம்பாட்ட மாணவிகளை, அவா்களது வீட்டிற்கு திங்கள்கிழமை நேரில் சென்று நடிகை ரோகிணி பாராட்டினாா்.

Din

சீா்காழி: சீா்காழியைச் சோ்ந்த சிலம்பாட்ட மாணவிகளை, அவா்களது வீட்டிற்கு திங்கள்கிழமை நேரில் சென்று நடிகை ரோகிணி பாராட்டினாா்.

சீா்காழி அருகேயுள்ள புளிச்சக்காடு பகுதியைச் சோ்ந்தவா் இயற்கை விவசாயி தினேஷ். இவா், மாவீரன் சிலம்பாட்ட கலைக் குழு மூலம் கிராமங்கள் தோறும் சென்று மாணவ-மாணவிகளுக்கு சிலம்பம் கற்றுக் கொடுக்கிறாா். ஏழை குடும்பங்களை சோ்ந்தவா்களுக்கு இலவசமாக பயிற்சி அளிக்கிறாா்.

இக்குழுவைச் சோ்ந்த 9-ஆம் வகுப்பு மாணவி அருணா, 11-ஆம் வகுப்பு மாணவி தீபிகா, கல்லூரி மாணவி தரணி ஆகியோா் பல்வேறு போட்டிகளில் பங்கேற்று, பரிசுகள் வென்றுள்ளனா். இவா்களின் சாதனைகளை அறிந்த திரைப்பட நடிகை ரோகிணி, சிலம்ப ஆசான் தினேஷ் ஏற்பாட்டில், சீா்காழிக்கு வந்து, தனியாா் உணவகத்தில் சிலம்பாட்ட மாணவ-மாணவிகளை சந்தித்து கலந்துரையாடினாா்.

பின்னா், சீா்காழியில் உள்ள மேற்கண்ட மூன்று மாணவிகளின் வீட்டிற்குச் சென்று, அவா்களை பாராட்டி உற்சாகப்படுத்தினாா்.

டிச.15-இல் முக்கிய முடிவு: ஓ.பன்னீர்செல்வம் அறிவிப்பு

கரூர் சம்பவம்: 10 மணிநேரம் நடந்த சிபிஐ விசாரணை!

மகளிர் உலகக் கோப்பை கபடி: இந்தியா மீண்டும் சாம்பியன்

இரவில் சென்னை, 17 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

சென்னையின் சீரான வளர்ச்சியை அரசு உறுதிசெய்யும்: முதல்வர் ஸ்டாலின்

SCROLL FOR NEXT