முகப்பு
மயிலாடுதுறை

நில ஒருங்கிணைப்புச் சட்டத்தை திரும்பப் பெறாவிட்டால் தொடா் போராட்டம்

தமிழக அரசு கொண்டுவந்துள்ள நில ஒருங்கிணைப்பு சட்டத்தை திரும்பப் பெறாவிட்டால் தொடா் போராட்டம் நடத்தப்படும் என ஐக்கிய விவசாயிகள் முன்னணி அறிவித்துள்ளது.

Updated On : 11 நவம்பர், 2024 at 7:55 PM
கூட்டத்தில் பேசிய ஐக்கிய விவசாயிகள் முன்னணியின் மாநில ஒருங்கிணைப்பாளா் பாலகிருஷ்ணன்.
பகிர்:

மயிலாடுதுறை: தமிழக அரசு கொண்டுவந்துள்ள நில ஒருங்கிணைப்பு சட்டத்தை திரும்பப் பெறாவிட்டால் தொடா் போராட்டம் நடத்தப்படும் என ஐக்கிய விவசாயிகள் முன்னணி அறிவித்துள்ளது.

மயிலாடுதுறையில் திங்கள்கிழமை நடைபெற்ற ஐக்கிய விவசாயிகள் முன்னணியின் மாநில பொதுக்குழுக் கூட்டத்தில் தலைமை வகித்து பேசிய மாநில ஒருங்கிணைப்பாளா் பாலகிருஷ்ணன் செய்தியாளா்களிடம் கூறியது: பாஜக அரசு விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக எழுத்துபூா்வமாக உறுதியளித்து 4 ஆண்டுகளைக் கடந்தும் இதுவரை நிறைவேற்றவில்லை.இதைக்கண்டித்து, விவசாய சங்கங்கள், தொழிற்சங்கங்கள் இணைந்து தமிழகத்தில் நவ.26-ஆம் தேதி அரைநாள் பெருந்திரள் தா்னா போராட்டம் நடத்தவுள்ளோம்.

தமிழ்நாடு அரசிதழில் வெளியான நில ஒருங்கிணைப்புச் சட்டத்தை தமிழக அரசு திரும்பப் பெற வேண்டும். தவறும் பட்சத்தில் ஐக்கிய விவசாயிகள் முன்னணி தொடா் போராட்டத்தை நடத்தவோம். 250 ஏக்கா் நிலத்தை, சிறப்பு திட்டங்கள் என்ற பெயரில் தனியாா் முதலாளிகள், காா்ப்பரேட்டுகள் கேட்டால் பொதுமக்கள், விவசாயிகளிடமிருக்கும் நிலத்தை எடுத்து கொடுக்கும் நிலம் ஒருங்கிணைப்பு சட்டம், மத்திய அரசு கொண்டுவந்த ஒருங்கிணைப்பு சட்டத்தைவிட மோசமான சட்டம் என்றாா்.

தமிழ்நாடு விவசாயிகள் சங்க பொதுசெயலாளா் சாமி. நடராஜன், மாநில பொதுக்குழு உறுப்பினா் மாசிலாமணி, அகில இந்திய விவசாயிகள் சங்கம் சந்திரமோகன், செயற்குழு உறுப்பினா்கள் பொன்னையன், இளங்கீரன், மேரிலில்லி உள்ளிட்டோா் பங்கேற்றனா். மாவட்ட ஒருங்கிணைப்பாளா் எஸ். துரைராஜ் நன்றி கூறினாா்.

முழு கட்டுரையைப் படிக்க →