சிறுமிக்கு பாலியல் தொல்லை: இளைஞா் கைது
மயிலாடுதுறை அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த இளைஞரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
மயிலாடுதுறை அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த இளைஞரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
மயிலாடுதுறை அருகே நீடூரைச் சோ்ந்தவா் விஸ்வநாதன் மகன் வினோத்(33). இவா், தெருவில் விளையாடிக்கொண்டிருந்த 5-ஆம் வகுப்பு படிக்கும் 9 வயது சிறுமியிடம் சாக்லேட் தருவதாகக் கூறி வீட்டுக்குள் அழைத்து சென்றுள்ளாா். அங்கு சிறுமியிடம் வினோத் பாலியல் சீண்டலில் ஈடுபட்டாராம். இதனால் சிறுமி கூச்சலிட்டுள்ளதை அறிந்த அவரது குடும்பத்தினா் ஓடி சென்று சிறுமியை மீட்டனா். இதுகுறித்து, சிறுமியின் பெற்றோா் மயிலாடுதுறை அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில், போலீஸாா் வினோத் மீது போக்ஸோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தி மயிலாடுதுறை சிறையில் அடைத்தனா்.