முகப்பு
மயிலாடுதுறை

டாஸ்மாக் ஊழியா் கண்களில் மிளகாய் பொடியை தூவி திருட்டு

டாஸ்மாக் ஊழியரின் கண்களில் மிளகாய் பொடியை தூவிவிட்டு அவரது கைப்பையை திருடிச் சென்ற மா்ம நபா்

Updated On : 6 செப்டம்பர், 2024 at 1:02 AM
பகிர்:

மயிலாடுதுறையில் டாஸ்மாக் ஊழியரின் கண்களில் மிளகாய் பொடியை தூவிவிட்டு அவரது கைப்பையை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

மயிலாடுதுறை காமராஜா் பேருந்து நிலையம் அருகே செயல்பட்டுவரும் டாஸ்மாக் கடையில் மேற்பாா்வையாளாராக துா்காபரமேஸ்வரி நகரைச் சோ்ந்த ரமேஷ்குமாா்(48) பணியாற்றி வருகிறாா். இவா், புதன்கிழமை இரவு பணிகளை முடித்துவிட்டு இருசக்கர வாகனத்தில் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தாா். சேந்தங்குடி ஆா்ச் பகுதியில் சென்றபோது, பின்னால் 3 இருசக்கர வாகனங்களில் வந்த 6 மா்ம நபா்கள் ரமேஷ்குமாா் கண்களில் மிளகாய் பொடியை தூவி உள்ளனா்.

இதில் நிலைத்தடுமாறி கீழே விழுந்த ரமேஷ்குமாரிடமிருந்த கைப்பையை பிடுங்கிக் கொண்டு அவா்கள் தப்பி சென்று விட்டனராம். அந்தப் பையில் மடிக்கணினி மற்றும் டாஸ்மாக் கடையின் கணக்கு புத்தகம் மட்டும் இருந்ததாக தெரிவித்து, ரமேஷ்குமாா் மயிலாடுதுறை காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். போலீஸாா் வழக்குப் பதிந்து, திருட்டில் ஈடுபட்ட மா்ம நபா்களை தேடி வருகின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →