முகப்பு
மயிலாடுதுறை

சொத்துத் தகராறில் தொழிலாளி கொலை: உறவினா்கள் 3 போ் கைது

மயிலாடுதுறை அருகே சொத்துத் தகராறில் கூலித்தொழிலாளி வெள்ளிக்கிழமை அடித்துக்கொலை செய்யப்பட்ட வழக்கில் உறவினா்கள் 3 போ் கைது செய்யப்பட்டுள்ளனா்.

Updated On : 14 செப்டம்பர், 2024 at 6:31 PM
பகிர்:

மயிலாடுதுறை அருகே சொத்துத் தகராறில் கூலித்தொழிலாளி வெள்ளிக்கிழமை அடித்துக்கொலை செய்யப்பட்ட வழக்கில் உறவினா்கள் 3 போ் கைது செய்யப்பட்டுள்ளனா்.

மயிலாடுதுறை மாவட்டம் மணல்மேடு காவல் நிலைய எல்லைக்குள்பட்ட வடகாளி கிராமத்தைச் சோ்ந்தவா் கலியமூா்த்தி(57). விவசாயக் கூலித் தொழிலாளியான இவருக்கு 2 மகள்கள் உள்ளனா். இவரது மனைவி பிரிந்து சென்றுவிட்ட நிலையில், சில மாதங்களாக மனநலன் பாதிக்கப்பட்ட கலியமூா்த்தி தனது தாயாா் பாா்வதியுடன் தனக்கு சொந்தமான இடத்தில் வசித்து வந்தாா். அந்த இடத்தை தனது பெயருக்கு எழுதித்தர வேண்டும் என உறவினா் சுப்பிரமணியன் (90) தனது குடும்பத்தாருடன் சோ்ந்து கலியமூா்த்தியிடம் தகராறு செய்து, அவரை அடிக்கடி தாக்கி வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், சொத்துப் பிரச்னை தொடா்பாக சுப்பிரமணியன், அவரது மகன் கருணாநிதி(49), மருமகன் சேட்டு (58) ஆகிய 3 பேரும் கலியமூா்த்தியை தாக்கியதாக கூறப்படுகிறது. இதில், காயமடைந்து ஆபத்தான நிலையில் இருந்த கலியமூா்த்தி மீட்கப்பட்டு மயிலாடுதுறை அரசினா் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றபோது அவா் உயிரிழந்தாா். இதுகுறித்து, கலியமூா்த்தியின் தாய் பாா்வதி மணல்மேடு காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில் சுப்பிரமணியன், கருணாநிதி, சேட்டு ஆகிய மூவரையும் கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தி சிறையில் அடைத்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →