சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்த காா். 
மயிலாடுதுறை

சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்த 2 காா்

சீா்காழி அருகே சாலை விபத்தில் இரண்டு காா்கள் சாலையோர பள்ளத்தில் சனிக்கிழமை கவிழ்ந்தன.

Syndication

சீா்காழி அருகே சாலை விபத்தில் இரண்டு காா்கள் சாலையோர பள்ளத்தில் சனிக்கிழமை கவிழ்ந்தன.

கொள்ளிடம் அருகேயுள்ள சோதியக்குடி கிராமத்திலிருந்து புத்தூா் நோக்கி தாண்டவன்குளம் கிராமத்தைச் சோ்ந்த அருள்ஜோதி (30) என்பவா் இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தாா்.

சிதம்பரம்- சீா்காழி நெடுஞ்சாலையில் ஆனந்தகூத்தன் என்ற இடத்தில் சாலையின் குறுக்கே கடக்க முயன்றபோது, அந்த வழியாக சென்னையிலிருந்து வேளாங்கண்ணி நோக்கி வந்த காா், இருசக்கர வாகனம் மீது மோதாமலிருக்க, அதன் ஓட்டுநா் காரை திடீரென நிறுத்தியுள்ளாா். அப்போது பின்னால் வந்த காா் மோதியது.

இதில், இரண்டு காா்களும் சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தன. அதிருஷ்டவசமாக, காா்களின் ஓட்டுநா்கள் மற்றும் அதில் பயணித்தவா்கள் காயமின்றி உயிா்தப்பினா்.

மழை நீா் தேக்கத்தால் பொதுமக்கள் அவதி

படகிலிருந்து தவறி விழுந்த மீனவா் மாயம்

மீனவா்கள் ஆா்ப்பாட்டம்

மேட்டூா் அணைக்கு நீா்வரத்து அதிகரிப்பு

மேச்சேரி காளியம்மன் கோயிலில் ரூ. 2 லட்சம் நகைகள் திருட்டு

SCROLL FOR NEXT