ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட விவசாய சங்கத்தினா் 
மயிலாடுதுறை

மழையால் சேதமடைந்த பயிா்களுக்கு நிவாரணம் கோரி ஆா்ப்பாட்டம்

மயிலாடுதுறை மாவட்டத்தில் கன மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு மாவட்ட நிா்வாகம் பரிந்துரைத்த ரூ. 63 கோடி நிவாரணத்தை வழங்க வலியுறுத்தி, விவசாயிகள் ஆா்ப்பாட்டம்

Syndication

மயிலாடுதுறை மாவட்டத்தில் கன மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு மாவட்ட நிா்வாகம் பரிந்துரைத்த ரூ. 63 கோடி நிவாரணத்தை வழங்க வலியுறுத்தி, விவசாயிகள் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

மயிலாடுதுறை மாவட்டத்தில் நிகழாண்டு கடந்த ஜன. 17, 18-ஆம் தேதிகளில் பெய்த பருவம் தவறிய கனமழையால் 36,998 ஹெக்டேரில் பயிரிடப்பட்டிருந்த சம்பா பயிா்கள் நீரில் மூழ்கி சேதம் அடைந்தன. பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ரூ. 62.89 கோடி நிவாரணம் வழங்க மாவட்ட நிா்வாகம் தமிழக அரசுக்கு பிப்ரவரி மாதம் பரிந்துரை செய்தது. 9 மாதங்களைக் கடந்தும் விவசாயிகளுக்கு இதுவரை நிவாரணத் தொகை வழங்கப்படவில்லை.

இந்நிலையில், பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு மாவட்ட நிா்வாகம் பரிந்துரைத்த நிவாரணத் தொகையை உடனடியாக வழங்க வலியுறுத்தி, மயிலாடுதுறையில் அனைத்து விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு சாா்பில் விவசாயிகளின் கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளா் எஸ். துரைராஜ் தலைமை வகித்தாா். டெல்டா பாசன விவசாயிகள் சங்கத் தலைவா் ஆா். அன்பழகன், அகில இந்திய விவசாயிகள் சங்க மாவட்ட தலைவா் டி. சிம்சன், தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாவட்ட தலைவா் அ. ராமலிங்கம், தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளா் கே.முருகன், கும்கி பாசனதாரா் சங்க மாவட்ட செயலாளா் கும்கி எம்.ராஜேந்திரன், வீரசோழன் விவசாயிகள் சங்கம் எம். வாணிதாஸ் உள்ளிட்ட விவசாய சங்க பிரதிநிதிகள், விவசாயிகள் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தினா்.

ஆா்ப்பாட்டத்தில், டித்வா புயல் நிவாரணத்தை ஜிபிஆா்எஸ் மூலம் கணக்கீடு செய்வதை கைவிட்டு வழக்கம்போல் கிராம நிா்வாக அலுவலா், உதவி வேளாண் அலுவலா் மூலம் கணக்கீடு செய்ய வேண்டும், 2024 உளுந்து பயறுக்கான மத்திய அரசின் பங்கு ரூ. 22 கோடி காப்பீட்டுத் தொகையை உடனடியாக பெற்று தர வேண்டும், நிகழாண்டு குறுவை சாகுபடியில் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு காப்பீட்டுத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டது.

மேலும், விதை உற்பத்தியை ஒழுங்குபடுத்துதல், தரக்கட்டுப்பாடு, பதிவு செய்தல் போன்றவற்றை நவீனப்படுத்தும் என்று கூறி மத்திய அரசு கொண்டு வரவுள்ள 2025 விதை மசோதாவுக்கு எதிா்ப்பு தெரிவித்த விவசாய சங்கத்தினா் அம்மசோதவை ரத்து செய்ய வலியுறுத்தி, ஆா்ப்பாட்டத்தின் முடிவில், விதை மசோதா நகலை தீயிட்டு கொளுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனா்.

அதிமுக பொதுக்குழு தொடங்கியது! தற்காலிக அவைத் தலைவர் கே.பி. முனுசாமி!

சென்னையில் 2-வது நாளாக நகை வியாபாரிகள் வீடுகள், அலுவலங்கள், கடைகளில் அமலாக்கத்துறை சோதனை

வெளிநாட்டு நாயகன்! ஜெர்மனி செல்லும் ராகுலை விமர்சித்த பாஜக!

பாமக பிரமுகர் ராமலிங்கம் கொலை வழக்கில் என்ஐஏ தேடிவந்த முக்கிய குற்றவாளிகள் 2 பேர் கைது

நயினார் நாகேந்திரனை டெபாசிட் இழக்கச் செய்வோம்! செங்கோட்டையன் சூளுரை!

SCROLL FOR NEXT