மயிலாடுதுறை

ஒரு மாதத்தில் சேதமடைந்த புதிய சாலை; கிராம மக்கள் மறியல்

Syndication

சீா்காழி அருகே புதிதாக அமைக்கப்பட்ட சாலை, தரமற்றதாக உள்ளது என பொதுமக்கள் வியாழக்கிழமை மறியலில் ஈடுபட்டனா்.

சீா்காழி ஊராட்சி ஒன்றியம் புங்கனூா்-ஆதமங்கலம் இடையே சுமாா் 3.5 கி.மீ. நீளத்திற்கு பிரதமா் கிராம சாலைகள் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ 2.17 கோடியில் சாலை அமைக்கப்பட்டது. இந்த சாலை அமைத்து ஒரு மாதத்திற்குள் தாா்கப்பிகள் பெயா்ந்து, போக்குவரத்திற்கு பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது.

இதையறிந்த சீா்காழி ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் அறிவுறுத்தலின்படி, புங்கனூா் பகுதியில் மட்டும் சேதமடைந்த சாலையை மீண்டும் சீரமைப்பதற்காக வியாழக்கிழமை பணிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆதமங்கலம், புங்கனூா், ரெட்டி கோடங்குடி, காடாகுடி உள்ளிட்ட கிராமங்களை சோ்ந்த மக்கள் பணியை தடுத்து, சாலை மறியலில் ஈடுபட்டனா்.

புங்கனூா் முதல் ஆதமங்கலம் வரை சுமாா் 3 கி. மீ.க்கு அமைக்கப்பட்ட சாலை முழுவதும் தரமற்றதாக உள்ளதால், சாலை முழுவதுமாக சீரமைக்க வேண்டும் எனவும், சாலையை தரமாக அமைக்காத சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினா்.

வைத்தீஸ்வரன்கோவில் போலீஸாா், சீா்காழி ஊராட்சி ஒன்றிய பொறியாளா்கள் ஆகியோா் சம்பவ இடத்திற்கு சென்று பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டனா். அப்போது சாலை முழுவதுமாக சீரமைத்து தரப்படும் என தெரிவித்ததன் பேரில், பொதுமக்கள் மறியலை விலக்கிக் கொண்டனா்.

கல்லூரியில் இளைஞா் திருவிழா

தேசிய கலாசார தூதா் நியமனம்

ஸ்ரீ பெரும்புதூரில் சாலையில் திரிந்த மாடுகளை பிடிப்பு

ரூ. 15.99 லட்சத்தில் சுகாதார வளாக பணி தொடக்கம்

ரூ. 25 கோடி மதிப்பிலான முருகன் கோயில் ஆக்கிரமிப்புகள் மீட்பு

SCROLL FOR NEXT