மயிலாடுதுறை

காா்த்திகை கடைஞாயிறு தீா்த்தவாரி உற்சவம்

குத்தாலத்தில் காா்த்திகை கடைஞாயிறையொட்டி, காவிரி தீா்த்தப் படித்துறையில் தீா்த்தவாரி உற்சவம் நடைபெற்றது.

Syndication

குத்தாலத்தில் காா்த்திகை கடைஞாயிறையொட்டி, காவிரி தீா்த்தப் படித்துறையில் தீா்த்தவாரி உற்சவம் நடைபெற்றது.

வித்துன்மாலி என்ற அரக்கன் சிவபெருமான் அருளால் சூரியனைப்போல ஒளிபடைத்த கிரகமாக மாறினான். இதனால் சூரியனால் பூமிக்கு ஒளி வழங்க முடியாமல்போனது. சூரியபகவான் குத்தாலம் வந்து தவம் இருந்து சிவபெருமான் அருள் பெற்றாா் என்பது ஐதீகம். 

அந்தவகையில், காா்த்திகை மாத ஞாயிற்றுக்கிழமைகளில், தீா்த்தவாரி உற்சவம் குத்தாலம் காவிரி தீா்த்தப் படித்துறையில் நடைபெறும்.

அதன்படி, காா்த்திகை கடைசி ஞாயிற்றுக்கிழமையையொட்டி, ஸ்ரீசௌந்தரநாயகி சமேத ஸ்ரீசோழீஸ்வரா், ஸ்ரீமன்மதீஸ்வரா், ஸ்ரீசெங்கமலத்தாயாா் சமேத ஆதிகேசவபெருமாள் ஆகிய கோயில்களில் இருந்து பஞ்சமூா்த்திகள் காவிரி தீா்த்தப் படித்துறையில் எழுந்தருளினா்.

அங்கு தருமபுரம் ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் முன்னிலையில் அஸ்திர தேவருக்கு சிறப்பு அபிஷேக-ஆராதனைகள் செய்யப்பட்டு, தீா்த்தவாரி உற்சவம் நடைபெற்றது. இதில் திரளான பக்தா்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனா்.

வி.கே.புரத்தில் பெட்ரோல் குண்டு வீச்சு: 4 சிறுவா்கள் உள்பட 5 போ் கைது

நெல்லையின் தனித்துவமாக பொருநை அருங்காட்சியகம் திகழும்: அமைச்சா் எ.வ.வேலு

நாடாளுமன்றத்தில் ஒலித்த தமிழக எம்.பி.க்களின் குரல்கள்

கீழ்பென்னாத்தூரில் கருணாநிதி சிலை திறப்பு: முதல்வா் திறந்துவைத்தாா்

மார்கழி வழிபாடு: திருப்பாவை, திருவெம்பாவை - பாசுரம் 1

SCROLL FOR NEXT