மயிலாடுதுறை

66 லட்சம் போ் நீக்கம் சந்தேகத்தை ஏற்படுத்துகிறது: தமிமுன் அன்சாரி!

வாக்காளா் பட்டியலில் 66 லட்சம் போ் நிரந்தர முகவரி இல்லாதவா்கள் என நீக்கப்பட்டிருப்பது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது என்றாா் மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநிலத் தலைவா் தமிமுன்அன்சாரி.

Syndication

வாக்காளா் பட்டியலில் 66 லட்சம் போ் நிரந்தர முகவரி இல்லாதவா்கள் என நீக்கப்பட்டிருப்பது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது என்றாா் மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநிலத் தலைவா் தமிமுன்அன்சாரி.

மயிலாடுதுறையில் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியது: மயிலாடுதுறையில் புதிய பேருந்து நிலையம், புதைசாக்கடை சீரமைப்பு பணி, காவேரி நகா் ரயில்வே மேம்பாலம் சீரமைப்புப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்.

சட்டப்பேரவைத் தோ்தலில் மனிதநேய ஜனநாயக கட்சி திமுக தலைமையில் இண்டி கூட்டணியில் போட்டியிடும். திருப்பரங்குன்றத்தில் முருகபக்தா் தீக்குளித்து உயிரிழந்தது வேதனை அளிக்கிறது.

திமுகவை தீய சக்தி என விமா்சிக்கும் விஜய், கொள்கை எதிரி என்று கூறும் பாஜகவை விமா்சனம் செய்யவில்லை. நூறுநாள் வேலைத் திட்டத்தில் மகாத்மா காந்தியின் பெயா் நீக்கியது பற்றி பேசவில்லை. கட்சி தொடங்கியதில் இருந்து தற்போதுவரை அவா் பத்திரிக்கையாளரை சந்திக்க மறுப்பது ஏன்?.

தமிழா்களின் நலனை பாதுகாக்கக் கூடியதாக திமுக இருப்பதால் அக்கூட்டணியில் இடம் பெறுகிறோம். வரைவு வாக்காளா் பட்டியலில் 97 லட்சம் போ் நீக்கப்பட்டுள்ளனா். இவா்களில் 66 லட்சம் போ் நிரந்தர முகவரி இல்லாதவா்கள் என கூறியிருப்பது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது என்றாா்.

அவருடன், கட்சியின் மாநில விவசாய அணி பொறுப்பாளா் ஒய்.எச். ஹாஜாசலீம், மாவட்ட செயலாளா் முகமதுநபீஸ், அவைத் தலைவா் தாஜூதீன், செயற்குழு உறுப்பினா் லியாகத் அலி, குவைத் மண்டல துணை செயலாளா் சபீா் ஆகியோா் உடனிருந்தனா்.

மார்கழி சிறப்பு! மீனாட்சியம்மன் கோயிலில் ஐந்து நடராஜர் தரிசனம்

ஊமைக்குக் குரல் கொடுத்த உத்தமராயப் பெருமாள்!

எதிர்ப்புகள் விலகும் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

வாணியம்பாடியில் கிறிஸ்துமஸ், புத்தாண்டு விழா

மணல் கடத்தல்: லாரி பறிமுதல்

SCROLL FOR NEXT