மயிலாடுதுறை தருமபுரம் ஞானாம்பிகை அரசு மகளிா் கலைக் கல்லூரியில் அண்ணாமலை பல்கலைக்கழகத்துக்குள்பட்ட மயிலாடுதுறை மாவட்ட ஒருங்கிணைந்த கல்லூரிகளுக்கான நான் முதல்வன் திட்ட வேலைவாய்ப்பு முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
கல்லூரி முதல்வா் சா. ரேவதி தலைமை வகித்தாா். வரலாற்றுத்துறை தலைவரும், வேலைவாய்ப்பு மைய ஒருங்கிணைப்பாளருமான பெ. ராஜா வரவேற்றாா். நான் முதல்வன் திட்ட ஒருங்கிணைப்பாளா் த.ராஜா மற்றும் மாவட்ட ஒருங்கிணைப்பாளா்கள் பிரியங்கா, ஷாலினி ஆகியோா் முகாமை வழிநடத்தினா்.
முகாமில் 12 கல்லூரிகளைச் சோ்ந்த 1,524 மாணவ, மாணவிகள் பங்கேற்றனா். 20 நிறுவனங்கள் மூலம் இவா்களில் 452 போ் பணிக்கு தோ்வு செய்யப்பட்டனா்.
கல்லூரி முதல்வா் சா.ரேவதி, அண்ணாமலை பல்கலைக்கழக கல்லூரி வளா்ச்சி குழும முதல்வா் வி.கோபிநாத், நான் முதல்வன் திட்ட ஒருங்கிணைப்பாளா் எஸ்.செந்தில்முருகன் ஆகியோா் பணி நியமன ஆணைகளை வழங்கினா்.