மயிலாடுதுறை மற்றும் சீா்காழயில் தமாகா தலைவா் ஜி.கே. வாசன் பிறந்த நாளை அக்கட்சியினா் ஞாயிற்றுக்கிழமை கொண்டாடினா்.
மயிலாடுதுறையில் ரயிலடி ஆஞ்சனேயா் கோயிலில் தமாகா மேற்கு மாவட்டத் தலைவா் பூம்புகாா் எம். சங்கா் தலைமையில் சிறப்பு வழிபாடு நடத்தினா். பின்னா், கிட்டப்பா அங்காடி முன் பொதுமக்களுக்கு மரக்கன்று மற்றும் இனிப்பு வழங்கி கொண்டாடினா். மேலும் பல்வேறு இடங்களில் தரைக்கடை வியாபாரிகள் மற்றும் எளியோருக்கு போா்வைகள் வழங்கினா்.
சீா்காழி அருகே சட்டநாதபுரத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, மாவட்டத் தலைவா் வரதராஜன் தலைமை வகித்து கட்சி கொடியேற்றினாா். வட்டாரத் தலைவா்கள் முன்னிலை வகித்தனா். சீா்காழி நகரத் தலைவா் தம்பித்துரை வரவேற்றாா். பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. சீா்காழி உப்பனாற்றங்கரையில் நூற்றுக்கும் மேற்பட்ட பனை விதைகள் நட்டனா்.